ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி ரீஸ்களை மொழிப்பெயர்க்கலாம்.. மெட்டா வெளியிட்ட அசத்தல் அம்சம்!
New Meta AI Reels Translate Feature | மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளில் அவ்வப்போது பல அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரீல்ஸ்களை மொழிப்பெயர்க்கும் ஒரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) ஆகிய செயலிகளுக்கு உலகம் முழுவதும் பில்லியன் பயனர்கள் உள்ளனர். ஏற்கனவே ஏராளமான பயனர்கள் உள்ள நிலையில், புதிய பயனர்களை ஈர்க்கும் விதமாகவும், பழைய பயனர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலும் இந்த செயலிகளில் மெட்டா பல அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது ரீல்ஸ்களை மொழிப்பெயர்க்கும் அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பு அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புகில் வந்த முக்கிய மாற்றம்
மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சங்களை தொடர்ந்து தனது செயலிகளில் அறிமுகம் செய்து வருகிறது. அவற்றுக்கு பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ரீல்ஸ்களை மொழிப்பெயர்ப்பு செய்யும் செயற்கை நுண்ணறிவு அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் பயனர்கள் தங்களுக்கு பிடித்த வீடியோக்களை மொழிப்பெயர்பு செய்து பார்க்க பெரும் உதவியாக இருக்கும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : அமேசானில் வந்தது Add to Delivery.. இனி ஆர்டர் செய்த பிறகும் கூட பொருட்களை ஆட் செய்துக்கொள்ளலாம்!




இனி ரீல்ஸ்களை சுலபமாக மொழிப்பெயர்த்துக் கொள்ளலாம்
மெட்டா தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் ரீல்ஸ்களை மொழிப்பெயர்ப்பு செய்யும் அம்சத்தை வழங்குகிறது. தற்போதைய நிலவரத்தின்படி இந்தி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பேனிஷ் ஆகிய மூன்று மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யலாம். பயனர்கள் இந்த மூன்று மொழிகளில் ரீல்ஸ்களை உருவாக்கி அதனை இந்த மூன்று மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் மொழிப்பெயர்த்துக்கொள்ளலாம் என்று மெட்டா கூறுகிறது.
இதையும் படிங்க : Festival Scam : பண்டிகை கால மோசடிகள்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஒரிஜினல் வீடியோவில் பேசும் நபர் எப்படி பேசுகிறாரோ அதே போல மிமிக் செய்வதற்கான அம்சமும் இதில் உள்ளதாக மெட்டா கூறுகிறது. அந்த வீடியோவில் பேசும் நபரின் வாய் அசைவை வைத்து அதற்கு ஏற்ப மொழிப்பெயர்ப்பு செய்யப்படும் என்றும் மெட்டா கூறியுள்ளது. தற்போது வரை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் உள்ள இன்ஃப்ளூயன்சர்கள் தாங்களே மொழிப்பெயர்ப்பு வாசகங்களை தங்களது வீடியோக்களில் இணைத்து பதிவிட்டு வரும் நிலையில், இந்த அம்சம் கிரியேட்டர்கள் மட்டுமன்றி, பயனர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.