Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி விமானத்தில் பயணம் செய்யும்போது பவர் பேங்க் பயன்படுத்தக்கூடாது.. எமிரேட்ஸ் அதிரடி உத்தரவு!

Power Bank Restriction in Emirates Airlines | தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பவர் பேங்குகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்யும்போது பயணிகள் பவர் பேங் பயன்படுத்தக்கூடாது என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இனி விமானத்தில் பயணம் செய்யும்போது பவர் பேங்க் பயன்படுத்தக்கூடாது.. எமிரேட்ஸ் அதிரடி உத்தரவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Oct 2025 15:32 PM IST

நீண்ட தூரம் அல்லது நீண்ட மணி நேரம் பயணம் செய்யும் பொதுமக்கள் சிலர் முன்னெச்சரிக்கையாக பவர் பேங்கை (Power Bank) உடன் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் (Emirates Airlines) பயணம் செய்யும் பொதுமக்கள், விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்த கூடாது என அந்த நிறுவனம் முக்கிய விதியை அறிமுகம் செய்துள்ளது. அக்டோபர் 1, 2025 முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருவதாகவும் எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ள பவர் பேங்க் பயன்பாடு

ஒரு ஸ்மார்ட்போன் இயங்க வேண்டும் என்றால் அதில் சார்ஜ் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. சார்ஜ் இல்லை என்றால் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த முடியாது. இந்த சூழலில் தான் பெரும்பாலான பொதுமக்கள் பவர் பேங்குகளை உடன் எடுத்துச் செல்கின்றனர். தங்களுக்கு தேவைப்படும்போது சார்ஜ் போட்டுக்கொள்ளும் வசதி பவர் பேங்கில் உள்ள நிலையில், பலரும் அதனை தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பவர் பேங்க் பொதுமக்களின் வாழ்வில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், விமானத்தில் பயணம் செய்யும்போது பவர் பேங்க் பயன்படுத்தக்கூடாது என்று அமிரேட்ஸ் நிறுவனம் புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : இயர் பட்ஸ்களை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்!

எமிரேட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய விதி

எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்யும் நிலையில், அந்த நிறுவனம் முக்கிய விதி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது எமிரேட்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் 100 வாட் கொண்ட ஒரே ஒரு பவர் பேங்கை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு பவர் பேங்கை எடுத்துச் சென்றாலும் பயணம் முழுவதும் அவர்களை அதனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும். பயணிகள் தங்களது பவர் பேங்குகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன், டேப் ஆகியவற்றுக்கு சார்ஜ் செய்யக்கூடாது. விமான இருக்கைகளில் இருக்கும் சார்ஜிங் போர்ட்களை பயன்படுத்தி பவர் பேங்கை சார்ஜ் செய்யக்கூடாது என்று கூறியுள்ளது.

இதையும்  படிங்க : இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்… தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தலாம்

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பவர் பேங்க் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன்  காரணமாக விமான பயணங்களின்போது பேட்டரிகள் தொடர்பான விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன. அதனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று எமிரேட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.