Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் லேப்டாப்கள்!

Amazon Great Indian Festival Sale | அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் நடைபெற்று வருகிறது. இந்த சேலில் மின்சாதன பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், லேப்டாப்களுக்கு வழங்கப்படும் அசத்தல் தள்ளுபடிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் லேப்டாப்கள்!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Sep 2025 15:16 PM IST

அமேசான் (Amazon) நிறுவனத்தின் தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (The Great Indian Festival Sale) நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 23, 2025 அன்று தொடங்கிய இந்த சேல் அக்டோடபர் 5, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பொருட்கள் அசத்தல் தள்ளுபடிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் லேப்டாப்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் – லேப்டாப்களுக்கு அசத்தல் தள்ளுபடி

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் சில முன்னணி நிறுவனங்களில் லேப்டாப்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி புக் 3

இந்த சாம்சங் கேலக்ஸி புக் 3 (Samsung Galaxy Book 3) லேப்டாட் 52 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ரூ.93,990 மதிப்பிலான இந்த லேப்டாப் வெறும் ரூ.44,844-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லெனோவா ஐடியா பேட்

லெனோவா ஐடியா பேட் (Lenovo Idea Pad) லேப்டாப் 37 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ரூ.70,990 மதிப்பிலான இந்த லேப்டாப் வெறும் ரூ.44,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : ரூ.79,999-க்கான கூகுள் பிக்சல் 9 வெறும் ரூ.34,999-க்கு விற்பனை.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் அதிரடி தள்ளுபடி!

ஏசர் ஸ்மார்ட் சாய்ஸ் லைட்

ஏசர் ஸ்மார்ட் சாய்ஸ் லைட் (Acer Smart Choice Lite) லேப்டாப் 47 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ரூ.58,990 மதிப்பிலான இந்த லேப்டாப் வெறும் ரூ.30,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல் 15

டெல் 15 (Dell 15) லேப்டாப் 31 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ரூ.49,518 மதிப்பிலான இந்த லேப்டாப் வெறும் ரூ.33,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல்.. இந்த 53 ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. லிஸ்ட் இதோ!

லெனோவா ஐடியா டேப் ப்ரோ

இந்த லெனோவா ஐடியா டேப் ப்ரோ (Lenovo Idea Tab Pro) 47 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ரூ.48,999 மதிப்பிலான இந்த லேப்டாப் வெறும் ரூ.25,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபேட் ஏர் 11

ஆப்பிள் ஐபேட் ஏர் 11 (Apple iPad Air 11) 23 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ரூ.59,900 மதிப்பிலான இந்த லேப்டாப் வெறும் ரூ.45,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.