லேப்டாப்பில் போனை சார்ஜ் செய்யக் கூடாது – ஏன் தெரியுமா?
Tech Safety Alert : அலுவலகத்தில் வேலை செய்யும் போது அல்லது பயணம் செய்யும் போது லேப்டாப்பில் இருந்து போனை சார்ஜ் செய்வது பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. உங்கள் ஸ்மார்ட்போனை லேப்டாப்பில் மடிக்கணினியிலிருந்து சார்ஜ் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நாள் கூட செலவிடுவது கடினம். பலர் தங்கள் தனிப்பட்ட வேலைகள் முதல் அலுவலகம் சார்ந்த வேலைகள் வரை அனைத்தையும் தங்கள் மொபைல் போன்களில் செய்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், ஸ்மார்ட்போன் பேட்டரி சார்ஜ் தீரும்போது, அதை விரைவாக சார்ஜ் செய்ய விரும்புகிறோம். இந்த நிலைில் வசதிக்காக லேப்டாப்பில் மொபைல் போன்களை சார்ஜ் செய்வதை ஒரு பழக்கமாக்கியுள்ளோம். குறிப்பாக, அலுவலகத்தில் வேலை செய்யும் போது அல்லது பயணம் செய்யும் போது, ஸமார்ட் போனை லேப்டாப்பில் இருந்து சார்ஜ் செய்கிறோம், ஆனால் லேப்டாப்பில் போனை சார்ஜ் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியாது.
ஸ்மார்ட்போனை அதன் ஒரிஜினல் சார்ஜருடன் சார்ஜ் செய்வது எப்போதும் நல்லது. ஆனால் நீங்கள் உங்கள் போனை லேப்டாப்பில் சார்ஜ் செய்தால், உங்கள் போன் மிக விரைவாக சேதமடையக்கூடும். எனவே உங்கள் தொலைபேசியை மடிக்கணினியிலிருந்து ஏன் சார்ஜ் செய்யக்கூடாது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
லேப்டாப்பில் ஏன் போனை சார்ஜ் செய்யக் கூடாது?
ஒரு மொபைல் போனை அதனுடன் கிடைக்கும் சார்ஜரிலிருந்து சார்ஜ் செய்யப்படும்போது, சார்ஜிங் வேகம் வேகமாக இருக்கும். மறுபுறம், லேப்டாப்பின் யுஎஸ்பி போர்ட்டிலிருந்து போனின் சார்ஜிங் வேகம் குறைகிறது. ஏனென்றால், பெரும்பாலான லேப்டாப்பில் USB 2.0 போர்ட் O.5A (ஆம்பியர்) மட்டுமே வழங்குகிறது மற்றும் USB 3.0 போர்ட் 0.9A பவரை வழங்குகிறது. ஆனால், போன் சார்ஜர் 2A அல்லது அதற்கு மேற்பட்ட பவரை வழங்குகிறது. இதன் காரணமாக போன் வேகமாக சார்ஜ் ஆகிறது.




பேட்டரி ஹெல்த் பாதிக்கப்படும்
குறைந்த மின்னழுத்தம் போனின் பேட்டரியை பாதிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் ஒரு லேப்டாப்பில் இருந்து நீண்ட நேரம் சார்ஜ் செய்தால், அது உங்கள் மொபைல் போனின் பேட்டரி ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும், இது பேட்டரியின் செயல்திறன் மற்றும் ஆயுட்காலம் குறையும்.
வெப்பமடைதல் பிரச்னை
லேப்டாப் போனை மெதுவாக சார்ஜ் செய்கிறது. இதன் காரணமாக, மொபைல் போனை நீண்ட நேரம் லேப்டாப்புடன் இணைக்கிறோம். இதைச் செய்வதன் மூலம், போன் வெப்பமடையத் தொடங்குகிறது. இது பேட்டரியைப் பாதிக்கிறது மற்றும் சேதமடையக்கூடும்.
லேப்டாப் பேட்டரியில் ஏற்படும் விளைவு
உங்கள் லேப்டாப் பேட்டரியில் இயங்கி, உங்கள் போனை அதனுடன் சார்ஜ் செய்தால், அதன் பேட்டரியும் விரைவாக டிஸ்சார்ஜ் ஆகத் தொடங்குகிறது. அது மட்டுமல்லாமல், இது லேப்டாப் பேட்டரி ஆயுளையும் குறைக்கிறது.
வைரஸ்கள் ஏற்படும் அபாயம்
போனை லேப்டாப்புடன் இணைப்பதன் மூலம், டேட்டா பரிமாற்றமும் யுஎஸ்பி வழியாகத் தொடங்குகிறது. மேலும் உங்கள் லேப்டாப்பில் வைரஸ் இருந்தால், அது போனிலும் நுழையலாம். அதே நேரத்தில், சார்ஜ் செய்வதற்காக உங்கள் தொலைபேசியை வேறொருவரின் லேப்டாப்புடன் இணைத்தால், உங்கள் டேட்டா திருடப்படும் அபாயமும் அதிகரிக்கிறது.