டிவி, யூடியூபை பின்னுக்குத் தள்ளிய ரீல்ஸ் – இந்தியாவில் 92% மக்கள் ஷார்ட் வீடியோவுக்கு ஆதரவு – ஆய்வில் வெளியான தகவல்
India Reels Dominance : ரீல்ஸ் வீடியோ அறிமுகமாகி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் மெட்டா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் 92 சதவிகிதம் பேர் ஷார் வீடியோவை தான் அதிகம் பார்ப்பதாக தெரிய வந்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் சமூக வலைதளங்கள் (Social Media) இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்ற தளமாக மாறியுள்ளது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப கண்டென்ட்கள் சமூக வலைதளங்களில் கிடைக்கின்றன. இதனால் மக்கள் நீண்ட நேரம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர். குறிப்பாக ரீல்ஸ் மற்றும் ஷார்ட் வீடியோ தான் இந்தியர்களின் விருப்பமான தேர்வாக இருந்து வருகிறது. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரீல்ஸ் இந்தியாவில் அறிமுகமாகி 5 வருடங்களை நிறைவு செய்யும் இந்த தருணத்தில் மெட்டா நிறுவனம் ஐப்சோஸ் (IPSOS) என்ற நிறுவனத்தின் மூலம் நடத்திய ஆய்வில், ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வு முடிவில், தற்போது இந்தியாவில் ரீல்ஸ் வடிவில், அதாவது ஷார்ட் வீடியோ வடிவில் தான் மக்கள் அதிகம் பார்க்கின்றனர். அதாவது மக்கள் தொலைக்காட்சி, யூடியூப் மற்றும் பிற சமூக ஊடகங்களை முந்தி முன்னிலையில் உள்ளது.
இதையும் படிக்க : பயனர்கள் பல நாட்களாக எதிர்ப்பார்த்து காத்திருந்த அம்சத்தை அறிமுகம் செய்தது Snapchat.. என்ன தெரியுமா?




ஷார்ட் வீடியோவுக்கு மக்கள் ஆதரவு
ஐப்சோஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவின் 33 நகரங்களில் இருந்து 3,500 பேரிடம் நடத்தப்பட்டது. அதில் 97 சதவிகிதம் பேர் தினமும் அதிகமாக ரீல்ஸ் போன்ற ஷார்ட் வீடியோவை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர். அதில் 92 சதவிகிதம் பேர் ரீல்ஸ் தான் தங்களின் விருப்பமான தளமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் 95 சதவிகிதம் பேர் தினமும் ரீல்ஸ் பார்ப்பதாக உறுதிபடுத்தியுள்ளனர். இதனால் மற்ற சமூக ஊடகங்களின் ஷார்ட் வீடியோக்களை விட ரீல்ஸ் குறைந்தது 12 சதவிகித புள்ளிகளால் முன்னிலையில் உள்ளது
இந்த ஆய்வில் ஜென் சி தலைமுறை இளைஞர்கள் மற்றும் நகர்புறத்தில் வசிக்கும் மக்கள் அதிகம் ரீல்ஸ் பார்க்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
மெட்டாவின் கருத்து
இந்தியாவுக்கான மெட்டாவின் மேலாண்மை இயக்குநரும் தலைவருமான அருண் ஸ்ரீநிவாஸ் கூறியதாவது, இந்தியா வீடியோ பயன்பாட்டில் உலகிற்கே முன்னிலை வகிக்கிறது. அதில் ரீல்ஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சரியாக 5 வருடங்களில் ரீல்ஸ் இந்தியாவின் முதன்மை குறும்பட வீடியோ தளமாக மாறியிருக்கிறது. ஏஐ மூலம் புதுமைகளை கொண்டு வருவது, கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு ஆதரவாக இருப்பது மற்றும் வணிகங்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவது போன்றவை எங்களது நோக்கம் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : ஸ்மார்ட் வாட்ச்சிற்கு பதிலாக ஸ்மார்ட் பேண்டை தேர்வு செய்யும் பிரபலங்கள் – காரணம் என்ன தெரியுமா?
ரீல்ஸ் இன்று இந்திய இணைய உலகில் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. டான்ஸ் வீடியோ சேலஞ்ச், மீம்கள், வீடியோக்கள், கெட் ரெடி வித் மி என பல ஆன்லைன் டிரெண்டுகள் ரீல்ஸில் தான் உருவாகின்றன.
இந்த ஆய்வின் படி மற்ற தளங்களை விட 33 அதிகமான கிரியேட்டர் என்கேஜ்மென்ட்டை உருவாக்கிறது. 40 சதவிகிதத்துக்கு மேல் உள்ள பயனர்கள் ஃபேஷன் தொடர்பான வீடியோ்ககளை பார்க்கின்றனர். அதே போல 20 சதவிகிதத்துக்கு அதிகமானோர் பியூட்டி மற்றும் மேக்கப் தொடர்பான வீடியோக்களை பார்க்கின்ரனர். மேலும் இசை மற்றும் சினிமா தொடர்பான வீடியோக்களை 16 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் பார்க்கின்றனர்.