AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஃபேஸ்புக்கில் ரீல்ஸ் மட்டும் தான் – மெட்டா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

Facebook Reels Update: காலத்துக்கு ஏற்ப ஃபேஸ்புக் நிறுவனம் அதன் பயனர்களுக்காக வடிவமைப்பையும் செயல்பாடுகளையும் மாற்றி வருகிறது. அந்த வகையில் அனைத்து வீடியோக்களை இனி ரீல்ஸ் ஃபார்மெட்டில் மாற்றும் முறையை அறிமுகப்படுத்தப்படுகிறது. இன்ஸ்டாகிராம் போல இனி ஃபேஸ்புக்கிலும் ரீல்ஸ் வடிவத்தில் மட்டுமே வீடியோக்களை அப்லோடு செய்ய முடியும்.

இனி ஃபேஸ்புக்கில் ரீல்ஸ் மட்டும் தான் – மெட்டா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Jun 2025 20:44 PM IST

ஃபேஸ்புக் (Facebook) நிறுவனம் காலத்துக்கு ஏற்ப தனது செயலின் வடிவமைப்பை மாற்றி வருகிறது. அந்த வகையில் மெட்டா (Meta) நிறுவனத்தின் புதிய அறிவிப்பின்படி, இனிமேல் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் எல்லா வீடியோக்களும் படிப்படியாக ரீல்ஸ் (Reels) ஆகவே மாற்றப்படும். வீடியோ எவ்வளவு நீளமாக இருந்தாலும், அது ஒரு ரீஸ்ஸ் வடிவத்திலேயே காட்டப்படும்.  இதன் காரணமாக, ஃபேஸ்புக்கில் காணப்படும் வீடியோ டேபின் பெயர் ரீல்ஸ் என்று பெயர் மாற்றப்படவுள்ளது. இது, இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு தளங்களிலும் ஒரே மாதிரியான வீடியோ அனுபவத்தை வழங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய மாற்றமாகும். இனி ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்யும் போதே ரீல்ஸ் ஃபார்மட்டில் தான் அப்லோடு செய்ய முடியும்.

ரீல்ஸ் தொடர்பாக மெட்டா அறிவிப்பு

மெட்டா தனது பிளாக் போஸ்ட மூலம் வெளியிட்டுள்ள பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் பல வகையான ரீல்ஸ்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் வீடியோக்கள் வழக்கம்போல உங்கள் விருப்பங்கள் நீளத்தில் அப்லோடு செய்து கொள்ளலாம் என்பதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் வழியில் ஃபேஸ்புக்

கடந்த 2022 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்தது. இன்ஸ்டாகிராமில் 15 நிமிடத்திற்குள்ள உள்ள வீடியோக்கள் தானாகவே ரீல்ஸ்களாக மாற்றப்பட்டன. தற்போது இதே வழியை ஃபேஸ்புக்கும் தொடர்கிறது. இதன் மூலம் அனைத்து வீடியோக்களும் ஒரே ஃபார்மெட்டில் செயல்படும். ஏஐ மூலம் இனி ரீலஸை அப்லோட் செய்யும் போதே எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தும். இதனால் பயனர்கள் அதிக நேரம் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரீல்ஸ்க்காக அப்டேட் செய்யப்பட்ட கிரியேட்டிவ் டூல்கள்

இந்த மாற்றத்தின் மூலம், அனைத்து வீடியோ கிரியேட்டர்களும் ஆடியோ எடிட்டிங், ஃபில்டர், விஷுவல் எஃபெக்ட்ஸ், டெக்ஸ்ட் ஓவர்லே, ஸ்டிக்கர்ஸ், கிஃப் ஆகிய வசதிகள் அளிக்கப்படும். இதன் மூலம் கிரியேட்டர் தனது வீடியோ நீளத்தை குறைக்காமல் வீடியோவை ரீல்ஸ் ஃபார்மெட்டில் மாற்றலாம்.

பிரைவசி மற்றும் செட்டிங்ஸில் ஏற்படும் மாற்றம்

இந்த புதிய முறையின் கீழ் ரீல்ஸ் மற்றும் வழக்கமான வீடியோக்களுக்கு இருந்த தனித்தனி செட்டிங்ஸ் மற்றும் பிரைவசியை ஒருங்கிணைக்கவிருக்கிறது. பழைய வீடியோக்களில் பிரத்யேகமாக பிரைவசியை தேர்ந்தெடுத்தவர்கள், தற்போது தங்களது பிரைவசி செட்டிங்ஸை திட்டமிட்டுள்ளது. நீங்கள் பகிர விரும்பும் ரீல்ஸ்களை நண்பர்கள் மட்டும், குறிப்பிட்ட குரூப், அல்லது பப்ளிக் என கட்டுப்படுத்தலாம்.

இந்த மாற்றம் ஒரே நாளில் அமல்படுத்தப்படாது. மெட்டா நிறுவனத்தின் தகவலின் படி இது படிப்படியாக அடுத்த சில மாதங்களில் செயல்படுத்தப்படும். கிரியேட்டர்களுக்கு இந்த மாற்றத்துக்கேற்ப தயாராக நேரம் வழங்கப்படும்.

 

Follow Us