Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Instagram, Facebook-ல் உங்கள் தகவல்கள் ஒட்டு கேட்கப்படுகிறதா?.. தடுப்பது எப்படி?

How to Control Your Data on Facebook and Instagram | இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயன்படுத்தும் பயனர்கள் தங்களது தகவல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த செயலிகளில் தகவல்கள் பயன்படுத்தப்படாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

Instagram, Facebook-ல் உங்கள் தகவல்கள் ஒட்டு கேட்கப்படுகிறதா?.. தடுப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 04 May 2025 23:42 PM

இணைய வசதி (Internet Facility) மற்றும் ஸ்மார்ட்போன்களின் (Smartphone) பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால், ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்களை (Social Medias) பயன்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களை பொறுத்தவரை பேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவை பொதுமக்களுக்கு மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. இந்த செயலிகள் உரையாடல், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு பயன்படுவதால் பெரும்பாலான மக்களின் முதன்மை தேர்வாக இவை உள்ளன. இதன் காரணமாக இந்த செயலிகள் அவர்களது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் செயலிகள்?

இந்த செயலிகள் மக்களுக்கு மிகவும் பிரபலமான செயலிகளாக இருந்தாலும், அவற்றில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக பயனர்கள் அவ்வப்போது புகார் தெரிவித்து வருகின்றனர். அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் ஒட்டுக்கேட்பதாக கூறி வருகின்றனர். உதாரணமாக, ஏதேனும் ஒரு பொருளை குறித்து தேடினால் அது தொடர்பான விளம்பரங்கள் வரும். இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகளில் தேடினால் மட்டுமன்றி கூகுளில் தேடினாலும், அல்லது அருகில் இருப்பவர்களிடம் அவற்றை குறித்து பேசினாலும் அது தொடர்பான விளம்பரங்கள் இந்த செயலிகளில் தோன்றும். இது ஒரு மிகப்பெரிய தகவல் திருட்டு மட்டுமன்றி, பாதுகாப்பு பிரச்னையாகவும் கருதப்படுகிறது.

இணைய செயல்பாடுகள் பின் தொடரப்படுவதை தவிர்ப்பது எப்படி?

இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் விளம்பரங்கள் வரும் நிலையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம செயலிகள் மீது புகார்களும் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து விளக்கம் அளித்த நிறுவனம் அந்த புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், உங்கள் தகவல்கள் சேகரிக்கப்படுவதை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

  • அதற்கு முதலில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு செல்ல வேண்டும்.
  • அங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Profile Picture கிளிக் செய்து Settings and Privacy என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு அதில் உள்ள Activity ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இந்த ஆப்ஷனை Off செய்து வைப்பதன் மூலம் உங்களது தகவல்கள் சேகரிக்கப்படுவது நிறுத்தப்படும். இதன் மூலம் உங்களுக்கு வரும் விளம்பரங்களை குறைக்கலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி உங்கள் சமூக ஊடக செயலிகளில் சேகரிக்கப்படும் தகவல்களை தடுத்து நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயம் காட்டிய படோனி.. கடைசியில் பஞ்சாபிடம் சரணடைந்த லக்னோ..!
பயம் காட்டிய படோனி.. கடைசியில் பஞ்சாபிடம் சரணடைந்த லக்னோ..!...
பாகிஸ்தானை சேர்ந்தவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது - NBDA!
பாகிஸ்தானை சேர்ந்தவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது - NBDA!...
உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?
உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?...
25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த குட் பேட் அக்லி!
25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த குட் பேட் அக்லி!...
பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!
பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!...
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி...
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!...
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?...
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!...
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!...
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!...