Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

10 ஆண்டுகளுக்கு பிறகு லோகோவை மாற்றிய கூகுள் – அப்படி என்ன ஸ்பெஷல்?

Google unveils new logo : கூகுள் நிறுவனம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு தனது லோகோவை மாற்றியிருக்கிறது. கூகுள், தனது புதிய ‘G’ லோகோவை Android 16 வெளியீட்டிற்கு முன்னதாக மாற்றியுள்ளது. இந்த புதிய லோகோ iOS மற்றும் Android பயனர்களுக்கு தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு லோகோவை மாற்றிய கூகுள் – அப்படி என்ன ஸ்பெஷல்?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 14 May 2025 15:54 PM

கூகுள் (Google ) தனது பிரபலமான ‘G’ ஐகானை முதல் முறையாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்துள்ளது. பழைய லோகோவைப் போல நான்கு தனித்தனியான நிறங்களில் அல்லாமல், இந்த புதிய வடிவத்தில்  நிறங்கள் ஒவ்வொன்றும் கலந்து காணப்படுகிறது. உதாரணமாக, சிவப்பைத் தொடர்ந்து மஞ்சள், மஞ்சளைத் தொடர்ந்து பச்சையைத் தொடர்ந்து நீலம் என பார்ப்பதற்கு கூலான தோற்றத்தில் இருக்கிறது. இதனால் முன்பைக் காட்டிலும் புதிய லோகோ வண்ணமயமாக இருக்கிறது. இந்த புதிய லோகோ அதன் பயனர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

கூகுளின் புதிய லோகோ

 

இந்த புதிய ‘G’ ஐகானை, iOS இல் கூகுள் தேடல் (Search) செயலியில் தற்போது புதுப்பிப்பின் பின் காணலாம். அதேபோல், Android பயனர்களுக்கும் இந்த புதுப்பிப்பு கடந்த மே 13, 2025 அன்று கூகுள் செயலியின் புதிய பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இணையதளத்தில் அப்டேட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் கடைசியாக தனது லோகோவை செப்டம்பர் 1, 2015 அன்று மாற்றியது. அப்போது  புராடெக்ட் சான்ஸ் (Product Sans) என்ற மாடர்னான எழுத்து வடிவதத்தில் கூகுள் இடம்பெற்றிருந்தது. அப்போது G என்பது லோயர்கேஸில் (Lowercase) வட்ட வடிவில் கலர்ஃபுல்லாக மாறியது. அதன் பிறகு  10 ஆண்டுகளாக கூகுள் லோகோ  மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் வெளியிடவிருக்கும் ஆண்ட்ராய்டு 16

 

இதற்கிடையில், Android Authority வெளியிட்ட செய்தியின்படி, கூகுள் தனது அடுத்த மாபெரும் மென்பொருள் அப்டேட் ஆன Android 16 ஐ நவீனமான லுக்குடன் வெளியிட தயாராகி வருகிறது. இதில் முக்கிய மாற்றம் Quick Settings Panel இல் கிடைக்கும். மொபைலில் மேலே இருந்து கீழே ஸ்வைப் செய்தால் வரும் அந்த மெனுவில், Wi-Fi மற்றும் Bluetooth ஐ ஒரு கிளிக்கில் ஆன் மற்றும் ஆஃப் செய்ய  புதிய பட்டன்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும், Screen Brightness Slider பகுதியிலும் புதிய ஸ்டைலிஷ் வடிவம் மற்றும் மேனுவலாக மாற்றக் கூடிய வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.  Status Bar-ல் காணப்படும் சிஸ்டம் ஐகான்களும் இப்போது புதிய வடிவத்தில் உள்ளன. Wi-Fi, Mobile Data ஐகான்கள் தனித்தனியாக காட்டப்படும். Airplane Mode, 5G போன்றவை தனித்து தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. Battery icon இப்போது மிகவும் டைனமிக் லுக்கில் மொபைல் சார்ஜ் ஆகும் போது பச்சையாகவும் சார்ஜ் குறையும்போது  சிவப்பாக மாறும் வடிவிவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் தனது ‘G’ ஐகானை புதுப்பித்துள்ளது என்பது ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதே நேரம், Android 16-இல் வரும் UI மாற்றங்கள், பயனர் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்...
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!...
தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்கணும் - விஜய் தேவரகொண்டா
தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்கணும் - விஜய் தேவரகொண்டா...
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது.. ஏன் தெரியுமா?...
சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?
சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?...
இந்திய இராணுவத்தில் முக்கிய பதவி.. நீரஜ் சோப்ராவிற்கு கௌரவம்!
இந்திய இராணுவத்தில் முக்கிய பதவி.. நீரஜ் சோப்ராவிற்கு கௌரவம்!...
ஜாலியோ ஜிம்கானா முதல் நேசிப்பாயா வரை... இந்த வார ஓடிடி லிஸ்ட்!
ஜாலியோ ஜிம்கானா முதல் நேசிப்பாயா வரை... இந்த வார ஓடிடி லிஸ்ட்!...
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்.. என்ன பலன் தெரியுமா?
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்.. என்ன பலன் தெரியுமா?...
திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா!
திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா!...
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து! விஜய் ஷா மீது FIR!
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து! விஜய் ஷா மீது FIR!...
குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ஜங்க் ஃபுட் விளம்பரங்கள்...
குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ஜங்க் ஃபுட் விளம்பரங்கள்......