ஏன் மக்கள் ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறுகிறார்கள்? – 8 முக்கிய காரணங்கள்
Android to iPhone Shift: உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 செப்டம்பர் 9, 2025 அன்று வெளியாகிறது. உலகம் முழுவதும் ஐபோன் vs ஆண்ட்ராய்டு போன்கள் என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் ஐபோன் மீதான ஆர்வத்துக்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயனர்களிடையே ஆண்ட்ராய்டு vs ஐபோன் (iPhone) விவாதங்கள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. ஆண்டிராய்டு போன்கள் சந்தையில் அதிகம் விற்பனையானாலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு எதிர்பாராத அளவில் வரவேற்பு உள்ளது. பொதுவாக ஐபோனைக் காட்டிலும் ஆண்ட்ராய்டு விலை குறைவு. மேலும் ஆண்ட்ராய்டு போன்களில் அதிக வசதிகள் கிடைக்கும். இருப்பினும் ஐபோன்கள் மீதான ஆவல் மக்களிடையே குறையவில்லை. ஐபோன் 17 விற்பனை செப்டம்பர் 9, 2025 அன்று முதல் துவங்கவிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறுவதற்கான 8 காரணங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
1.நீண்டகால சாஃப்ட்வேர் அப்டேட்
ஆப்பிள் நிறுனத்தின் மிகப்பெரிய பலம், அதன் நீண்டகால iOS அப்டேட் அப்டேட் சப்போர்ட் கிடைக்கும். பொதுவாக ஆண்ட்ராய்டு மொபைல்கள் 2 முதல் 3 ஆண்டுகள் மட்டுமே அப்டேட்கள் வழங்கும் நிலையில், ஐபோனுக்கு 5 முதல் 6 ஆண்டுகள் வரை அப்டேட்டுகள் கிடைக்கும். இதனால் போன் நீண்ட காலம் பாதுகாப்பாகவும், பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும்.
இதையும் படிக்க : அதிரடியாக அறிமுகமாகும் ஆப்பிள் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. நேரலையில் பார்ப்பது எப்படி?




2. பாதுகாப்பு
ஆப்பிள் நிறுவனம் பிரைவசி மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் உலக அளவில் பெயர் பெற்ற நிறுவனம். ஆப் டிராக்கிங், ஃபேஸ் ஐடி, end-to-end encryption போன்ற வசதிகள் ஐபோனை பாதுகாப்பு அம்சங்களில் முன்னணியில் நிறுத்துகின்றன.
3. ஆப்பிள் எகோசிஸ்டம்
ஐபோன், மேக் புக், ஏர்பாட்ஸ், ஐபேட், ஆப்பிள் வாட்ச் போன்றவற்றுடன் தடையில்லாத இணைப்பை வழங்குகிறது. ஏர்டிராப் மூலம் டாக்குமென்ட்களை பகிர்வது, அழைப்புகளை மேற்கொள்வது, ஒரு டிவைசில் தொடங்கிய வேலையை, வேறு டிவைசில் தொடர முடிவது போன்ற வசதிகள் ஆண்ட்ராய்டு பயனர்களை ஐபோனுக்கு இழுத்து செல்கின்றன.
4. ரீசேல் வேல்யூ
ஐபோன் சந்தையில் அதிக ரீசேல் வேல்யூ உள்ளது. பழைய ஐபோனிற்கும் நல்ல விலை கிடைக்கிறது. அதனால் நீண்டகால முதலீடாகவும் ஐபோன் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
5. கேமரா தரம்
உலக அளவில் ஐபோன்கள் போட்டோ, வீடியோ குவாலிட்டியில் முன்னணியில் உள்ளன. அதிக மெகாபிக்சல்கள் கொண்ட ஆண்ட்ராய்டு போன்கள் இருந்தாலும், ஐபோன்கள், கலர், வீடியோ ஸ்டெபிலைசேஷன் ஆகியவை கன்டென்ட் கிரியேட்டர்ஸ் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன.
இதையும் படிக்க : Apple iPhone 17 Air : அதிரடியாக களமிறங்க உள்ள ஆப்பிள் ஐபோன் 17 ஏர்.. அட இத்தனை சிறப்பு அம்சங்களா?
6. தடையில்லா அனுபவம்
ஐபோனின் மிகப்பெரிய பலம் அதன் தடையில்லாத அனுபவம், பயன்படுத்த மிகவும் இலகுவாக இருக்கும். ஆண்டிராய்டு போன்களைக் காட்டிலும் ஐபோன்கள் நீண்ட காலத்துக்கு நீடிக்கும். ஹேங்காவது போன்ற பிரச்னை அதில் இருக்காது.
7. பிராண்ட் மதிப்பு
ஐபோன் வாங்குவது அதன் சிறப்பம்சங்களுக்காக மட்டுமல்ல, பலருக்கும் அது ஒரு பொருளாதார நிலையை சொல்லும் குறியீடாக காட்டப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் ஐபோன் வைத்திருப்பது அது ஒரு கௌரமாக பார்க்கப்படுகிறது.
8. வாடிக்கையாளர் சேவை மற்றும் நம்பகத்தன்மை
ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை, சர்வீஸ் மற்றும் ஆப்பிள் போன்கலின் நம்பகத்தன்மை பயனர்களை அதிகம் ஈர்க்கின்றன. சில ஆண்ட்ராய்டு பிராண்டுகளில் ஒரே மாதிரியான சேவை இல்லாத காரணத்தால், பலர் ஐபோனை தேர்ந்தெடுக்கின்றனர்.