Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Apple iPhone 17 Series : விரைவில் அறிமுகமாகும் ஐபோன் 17 சீரீஸ்.. சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது!

Apple iPhone 17 Series | ஆப்பிள் நிறுவனம் தனது 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 09, 2025 அன்று அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Apple iPhone 17 Series : விரைவில் அறிமுகமாகும் ஐபோன் 17 சீரீஸ்.. சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது!
ஐபோன் 17 சீரீஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Sep 2025 18:06 PM IST

பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் (iPhone 15 Series Smartphones) விரைவில் அறிமுகமாக உள்ளன. அதாவது செப்டம்பர் 09, 2025 அன்று ஆப்பிள் தனது 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஐப்போன் 17 சீரீஸை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 சீரீஸில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை போலவே இருப்பதாகவும் கேமரா உள்ளிட்டவற்றில் ஒருசில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை சிறப்பு அம்சங்களா.. வெறும் ரூ.6,099-க்கு அறிமுகமான லாவா யுவா ஸ்மார்ட் 2!

ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை போலவே டிசைன் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் புதுப்பிக்கப்பட்ட கேமரா அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஃபிளாஷ் வலது பக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் லோகோவும் வேறு இடத்தில் பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Realem 15 T : 7,000 mAh பேட்டரி.. 128 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி 15 டி!

ஐபோன் நிறுவனம் ஒருபோதும் தங்களது ஸ்மார்ட்போன்களின் ரேம் குறித்த தகவல்களை வெளியிடாது. இதன் காரணமாக வழக்கமான எண் வெளியிடப்படுகிறது. பொதுவாக ஐபோன்களில் 8ஜிபி ரேம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறை அது மாற உள்ளதாக கூறப்பட்டுகிறது. அதாவது ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மாட்ர்போனகள் இந்த முறை 12 ஜிபி ரேம் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஐபோன்கள் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.