Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூகுள் குரோமில் இந்த ஷார்ட்கட் பற்றி தெரியுமா? இனி எல்லா வேலையும் ஈஸியா பண்ணலாம்

Google Chrome Shortcuts : கூகுள் குரோம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. குறிப்பாக மின்னஞ்சல் அனுப்ப வெப்சைட்டுகளை பார்க்க என பல வேலைகளுக்கு கூகுள் குரோம் பயன்படுகிறது. அதனை எளிதாக பயன்படுத்த சில ஷார்ட்கட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அது குறித்து பார்க்கலாம்.

கூகுள் குரோமில் இந்த ஷார்ட்கட் பற்றி தெரியுமா? இனி எல்லா வேலையும் ஈஸியா பண்ணலாம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Sep 2025 20:11 PM IST

கூகுள் குரோம்  (Google Chrome) நம் இணைய பயன்பாடுகளுக்கு மிகவும் பயனுள்ள டூலாக இருந்து வருகிறது. தகவல்களை தெரிந்துகொள்ள, வெப்சைட்டுகளை பயன்படுத்த, மின்னஞ்சல் அனுப்ப,  ஆவணங்களை அப்லோடு, டவுன்லோடு செய்ய, ஆன்லைன் ஷாப்பிங் செய்ய இப்படி பலவற்றுக்கு கூகுள் குரோம் பயன்படுகிறது. இது உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் குரோமில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த சில சிறப்பு அம்சங்கள் உள்ளன.  அதாவது நம் வேலையை எளிமையாக செய்ய உதவும் சில ஷார்ட்கட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உடனடியாகப் பயன்படுத்த வேண்டிய ஷார்ட்கட்ஸ்

  • உடனடியாக புதிய பக்கத்தை திறக்க Ctrl + T பயன்படுத்தலாம்.
  • தற்போது இருக்கும் பக்கத்தை மூட Ctrl + W பயன்படுத்தலாம்
  • தற்போது மூடிய பக்கத்தை மீண்டும் திறக்க Ctrl + Shift + T பயன்படுத்தலாம்.
  • கூகுள் குரோமின் புதிய விண்டோவை திறக்க Ctrl + N என்ற ஷார்ட்கட்டை பயன்படுத்தலாம்.
  • Incognito Modeக்கு செல்ல Ctrl + Shift + N என்ற ஷார்ட்கட்டை பயன்படுத்தலாம்.
  • ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு செல்ல Ctrl + Tab அல்லது Ctrl + Shift + Tab என்ற ஷார்ட்கட் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க : கூகுள் டிரான்ஸ்லேட்டில் இனி புது மொழியே கற்கலாம்.. வந்தது அசத்தல் ஏஐ அம்சம்!

கூகுள் குரோமின் சிறப்பு அம்சங்கள்

  • நீங்கள் தனிப்பட்ட முறையில் தகவல்களை தேட விரும்பினால் Incognito Mode பயன்படுத்தலாம். இதற்கு Ctrl + Shift + N என்ற ஷார்ட்கட்டை பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் பார்வையிட்ட வெப்சைட், தேடி விஷயங்கள் போன்ற எந்த தகவலும் சேமிக்கப்படாது. இந்த முறையில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
  • அடிக்கடி பயன்படுத்தும் இணைய பக்கங்களை பின் செய்து வைக்கலாம். குறிப்பாக வேலை சார்ந்து அடிக்கடி ஒரு குறிப்பிட்ட வெப்சைட் பயன்படுத்துகிறோம் என்றால் அதனை பின் செய்து வைப்பதன் மூலம் நம் வேலை எளிமையாகும். இதற்கு நீங்கள் இருக்கும் வெப்சைட் பக்கத்தில் இருந்து ரைட் கிளிக் செய்தால் உங்களுக்கு PIN செய்யும் விருப்பம் கிடைக்கும்.

இதையும் படிக்க : கூகுளில் தொலைபேசி எண்களை தேடுகிறீர்களா ? மோசடியில் சிக்கும் ஆபத்து

  • கூகுள் குரோம் மேல் உள்ள அட்ரஸ் பார் என்பது வெறும் இணையதள முகவரிகளை தேட மட்டும் அல்ல. அதனை நீங்கள் குறிப்பிட்ட கணக்குகளை பார்க்க, குறிப்பிட்ட விஷயங்களை தேட போன்ற பல வேலைகளை பயன்படுத்தலாம்.
  • கூகுள் குரோமில் பாஸ்வேர்டு மேனேஜரை வைத்து உங்கள் பாஸ்வேர்டை நிர்வகிக்கலாம். அதாவது நம் பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக சேமிக்கலாம். இதனால் உங்கள் பாஸ்வேர்டுகளை ஒவ்வொரு முறையும் டைப் செய்யும் வேலை குறைகிறது.