Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா? எச்சரிக்கை உண்மையா?

Gmail Users Alert: சமீப காலமாக ஜிமெயில் ஹேக் செய்யப்பட்டுள்ளது எனவும் பயனர்கள் உடனடியாக பாஸ்வேர்டை மாற்றுமாறு கூகுள் அறிவுறுத்தியதாகவும் எச்சரிக்கை தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் கூகுள் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா? எச்சரிக்கை உண்மையா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Sep 2025 18:46 PM

உலக அளவில் அதிக மக்கள் ஜிமெயில் (Gmail)பயன்படுத்தி வருகின்றனர்.  அரசின் சேவைகள், வங்கிகள்  (Bank) என அனைத்து அதிகாரப்பூர்வ சேவைகளுக்கும் நாம் ஜிமெயில் முகவரியைத் தான் அளிக்கிறோம். எனவே அதனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே இருக்கிறது. இந்த நிலையில் மக்களிடையே உள்ள எச்சரிக்கை மனநிலையை வைத்து தற்போது மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜிமெயிலில் மோசடி நடைபெறுகிறது, எனவே ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்றுங்கள் என பலருக்கும் எச்சரிக்கை மெசேஜ் வருகிறது. அதன் பின்னணி குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்ற சொல்லி நடைபெறும் மோசடி

சமீபத்தில் சில செய்திகள் கூகுள் அவசர எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி 2.5 மில்லியன் ஜிமெயில் பயனர்கள் பாஸ்வேர்டை மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கூகுள் நிறுவனம் இதனை முழுமையான பொய் தகவல் என அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம், ஷைனி ஹன்டர்ஸ் எனப்படும் ஒரு சைபர் கிரைம் டீம் சில சிறிய நிறுவனங்களின் வாடிக்கையாளர் டேட்டாவை ஹேக் செய்திருக்கிறது. இதனை கூகுள் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஆனால் இதில் ஜிமெயில் மற்றும் கூகுள் டிரைவ் போன்ற சேவைகள் பாதிக்கப்படவில்லை. மேலும் எந்தவொரு பாஸ்வேர்டும், நிதி தகவலும் திருடப்படவில்லை. ஆனால் சில மோசடி அமைப்புகள் இந்த ஹேக் சம்பவத்தை பயன்படுத்தி பயனர்களை தவறான வழியில் ஈடுபடுத்த முயற்சிக்கின்றன.

இதையும் படிக்க : ஜிமெயிலின் இந்த 5 சீக்ரெட்ஸ் பற்றி தெரியுமா? உங்கள் வேலை சில நிமிடங்களில் முடியும்

கூகுளில் நடைபெறும் மோசடிகள்

ஜிமெயில், கூகுள் டிரைவ் போன்ற சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றாலும், சிலர் மோசடி அமைப்புகள், பயனர்களை மெசேஜ் மூலம் தீங்கு விளைவிக்கக் கூடிய லிங்க் அனுப்பி ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்ற சொல்லி முயற்சிக்கின்றனர். இதன் மூலம் புதிய பாஸ்வேர்டை பயனர்கள் மாற்றும்போது, சைபர் கிரைம் குற்றவாளிகள் அதனை தெரிந்துகொள்கிறார். இதன் மூலம் முழுமையாக உங்கள் கணக்கு அவர்கள் கைக்கு போகும் ஆபத்து இருக்கிறது.

கூகுள் நிருவனம் கடந்த செப்டம்பர் 1, 2025 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஜிமெயில் பாதுகாப்பு மிகவும் வலுவாக உள்ளது. சமீபத்தில் பயனர்களை பாஸ்வேர்டு மாற்ற சொல்லி சில தவறான தகவல்கள் பரவி வருகின்றன.  இது முற்றிலும் பொய் . கூகுள் ஃபிஷிங் மற்றும் மால்வேர் தாக்குதல்களை 99.9 சதவிகிதம் பாதுகாக்கும் செயல்பாடுகள் உள்ளன. எனவே பயனர்கள் இது தொடர்பாக வரும் இமெயில்கள் மற்றும் லிங்குகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க : கூகுள் டிரான்ஸ்லேட்டில் இனி புது மொழியே கற்கலாம்.. வந்தது அசத்தல் ஏஐ அம்சம்!

எப்படி பாதுகாப்பாக இருப்பது ?

  • பாஸ்வேர்டுகளை நேரடியாக ஜிமெயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் செயலி மூலம் மட்டுமே மாற்றவேண்டும்.
  • இது தொடர்பாக வரும் மெசேஜ் மற்றும் லிங்க்குளுக்கு பதில் சொல்ல வேண்டாம்.
  • சந்தேகமுள்ள இமெயில்களை  ரிப்போர்ட் செய்யவும்.
  • பாஸ்கீஸ் பயன்படுத்துவது பாதுகாப்பு அளிக்கும்.