கூகுள் லொகேஷனை வைத்து காப்பீடு கோரிக்கையை நிராகரிக்க முடியுமா? உண்மை என்ன?
Location-Based Approval : கூகுள் மேப் லொகேஷனை வைத்து வல்லப் மோட்கா என்ற நபரின் கோரிக்கையை காப்பீடு நிறுவனம் மறுத்துள்ளது. கூகுள் மேப்பின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபர் மருத்துமனையில் இல்லை என அந்த நிறுவனம் காரணம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கூகுள் (Google)மனித வாழ்க்கையில் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அதன் சர்ச் இன்ஜின், ஜிமெயில், கூகுள் மேப், ஜிபே (GPay) என நம் பல தேவைகளை கூகுள் எளிதாக மாற்றியிருக்கிறது. அந்த வகையில் புதிதாக ஒரு இடத்திற்கு செல்ல அல்லது டிராஃபிக் இல்லாமல் விரைவாக அடைய கூகுள் மேப் பல வழிகளில் உதவுகிறது. ஆனால் அதே கூகுள் மேப் விபத்து ஏற்படும் பட்சத்தில் நமக்கு காப்பீடு கிடைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான விபத்துகள் நடைபெற்றுவருகின்றன. அந்த நேரங்களில் நமக்கு கைகொடுப்பது காப்பீடு தான். இந்த நிலையில் நமது போனின் கூகுள் மேப் லொகேஷன் அதற்கு தடையாக இருக்கலாம். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தற்போது காப்பீட்டு நிறுவனங்கள் அதன் பயனர்களுக்கு காப்பீடு வழங்குவதற்கு முன் அவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையில் இருக்கிறார்களா என சோதிக்க தொடங்கியுள்ளது. இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இது தொடர்பாக வல்லப் மோட்கா என்ற நபரின் கூகுள் மேப் லொகேஷன் டைம்லைனுடன பொருந்ததாதால் காப்பீடு நிராகரிக்கப்பட்டது. அதாவது அவர் சொன்ன நேரத்தில் மருத்துமனையில் இல்லை என்பதை காப்பீட்டு நிறுவனங்கள் கூகுள் மேப் லொகேஷனை வைத்து கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்து அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அக்டோபர் 1 முதல் UPI-ல் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.. NPCI திட்டவட்டம்!




காப்பீடுகளுக்கு கூகுள் மேப் லொகேஷனை பார்ப்பது சரியான நடைமுறையா?
எகனாமிக் டைம்ஸில் வந்த ஒரு செய்தின் படி, வல்லப் மோட்கா என்பவர் கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸிலிருந்து ரூ.6.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டை எடுத்தார். அது பிப்ரவரி 21, 2025 அன்று வரை செல்லுபடியாகும். இந்த நிலையில் நிமோனியா காரணமாக அவர் செப்டம்பர் 11, 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனயைடுத்து 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு செப்டம்பர் 14, 2025 அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனை பில் ரூ.48251 என வந்திருக்கிறது. ஆனால் கோ டிஜிட் நிறுவனம், வல்லப் மோட்காவின் கூகுள் மேப் லொகேஷன் மருத்துவமனையைக் காட்டாததால் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இதையும் படிக்க : e PAN : இ பான் கார்டு பதிவிறக்கம் செய்ய கூறி இமெயில் வந்ததா?.. தப்பி தவறி கூட திறந்துவிடாதீங்க!
எளிமையாக சொல்லப்போனால் அவர் சிகிச்சை பெற்றபோது அவரது கூகுள் மேப் லொகேஷன் மருத்துவமனையைக் காட்டவில்லை இதனால் அவர் மருத்துமனையில் இல்லை என கோ டிஜிட் நிறுவனம் முடிவு செய்தது. அவரது ந கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு, பாலிசிதாரர் நுகர்வோர் மன்றத்தில் தனது புகாரை தாக்கல் செய்துள்ளார். அங்கு நீதிமன்றம் அவர் கேட்ட தொகையான ரூ.48,251 ஐ செலுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.