Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

e PAN : இ பான் கார்டு பதிவிறக்கம் செய்ய கூறி இமெயில் வந்ததா?.. தப்பி தவறி கூட திறந்துவிடாதீங்க!

ePAN Card Download Scam Alert | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், அதில் பல மோசடி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இமெயிலில் பான் கார்டு பதிவிறக்கம் செய்ய கோரி புதிய மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.

e PAN : இ பான் கார்டு பதிவிறக்கம் செய்ய கூறி இமெயில் வந்ததா?.. தப்பி தவறி கூட திறந்துவிடாதீங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Aug 2025 20:00 PM

தொழில்நுட்ப வளர்ச்சி (Technology Development) நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனை பயன்படுத்தி பல வகையான மோசடி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்,  இ பான் கார்டு ( e PAN Card) பதிவிறக்கம் செய்ய கோரி பொதுமக்களுக்கு மோசடி இமெயில் வருவதாகவும், அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று PIB Fact Check அமைப்பு  எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இ பான் கார்டு பதிவிறக்கம் மோசடி தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள்

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் சமூக ஊடக செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். விரைவாக தகவல் பரிமாற்றம் செய்யப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் இமெயில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஏராளமான பொதுமக்கள் இந்த செயலிகளை பயன்படுத்தும் நிலையில், அதன் மூலம் பல மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் இமெயில் மூலம் புதிய மோசடி சம்பவம் நடைபெற்று வருவதாக பிஐபி எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : e Mail-ல் வரும் இந்த லிங்கை கிளிக் செய்யாதீங்க.. வருமான வரி தாக்கல் மோசடி குறித்து எச்சரிக்கும் PIB!

இமெயில் மூலம் பான் கார்டு பயன்படுத்தி மோசடி – எச்சரித்த பிஐபி

அது குறித்து பிஐபி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உங்களுக்கு இ பான் கார்டை பதிவிறக்கம் செய்ய கோரி ஏதேனும் இமெயில் வந்ததா. இந்த இமெயில் முற்றிலும் போலியானது. தனிப்பட்ட மற்றும் முக்கிய தகவல்கள் குறித்து கோரி இமெயில், லிங்குகள், கால், குறுஞ்செய்தி ஆகியவை வந்தால் அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் அதன் மூலம் நீங்கள் மோசடி செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பிஐபி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.