Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Google Translate : கூகுள் டிரான்ஸ்லேட்டில் இனி புது மொழியே கற்கலாம்.. வந்தது அசத்தல் ஏஐ அம்சம்!

Google Translate Language Learning Feature | கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரான்ஸ்லேட் அம்சத்தை பயன்படுத்தி இதுவரை மொழிப்பெயர்ப்பு செய்து வந்த நிலையில், இனி புது மொழியே கற்றுக்கொள்ளும் வகையில் அசத்தல் அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Google Translate : கூகுள் டிரான்ஸ்லேட்டில் இனி புது மொழியே கற்கலாம்.. வந்தது அசத்தல் ஏஐ அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Aug 2025 00:37 AM

கூகுள் (Google) நிறுவனம் தனது கூகுள் டிரான்ஸ்லேட் (Google Translate) செயலியில் அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவை (AI – Artificial Intelligence) பயன்படுத்தி அந்த செயலியிலே புதிய மொழியை கற்றுக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மொழியை கற்பிக்கும் செயலிகளுக்கு போட்டியாக தற்போது கூகுள் டிரான்ஸ்லேட் மாறியுள்ளது. இந்த நிலையில், கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் வந்துள்ள அந்த புதிய அம்சத்தின் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கூகுள் டிரான்ஸ்லேட்

கூகுள் செயலிகளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். அதில் மிக முக்கியமான செயலி என்றால் அது கூகுள் டிரான்ஸ்லேட் தான். வேற்று மொழி தெரியாத பொதுமக்கள் வேற்று மொழியில் இருக்கும் தகவல்களை இந்த கூகுள் டிரான்ஸ்லேட் செயலி மூலம் அறிந்துக்கொள்கின்றனர். இந்த கூகுள் டிரான்ஸ்லேட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், பொதுமக்களுக்கு மொழி ஒரு தடையாக இல்லை. இந்த கூகுள் டிரான்ஸ்லேட் மிகவும் சிறந்த அம்சமாக உள்ள நிலையில், தற்போது அதில் மேலும் ஒரு அசத்தல் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Instagram : இன்ஸ்டாகிராமில் இனி Part-2 வீடியோவை தேடி அலைய வேண்டாம்.. வந்தது அசத்தல் அம்சம்!

ஏஐ கூகுள் டிரான்ஸ்லேட் அம்சம் – சிறப்பு அம்சங்கள் என்ன?

மற்ற செயலிகளை போல் இல்லாமல் கூகுள் டிரான்ஸ்லேட் முற்றிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை மையப்படுத்தியதாக உள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்த முதலில் பயனர்கள் செயலியில் உள்ள பிராக்டிஸ் (Practice) பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு பயனர்களுக்கு அவர்களது மொழி அறிவு குறித்து சில கேள்விகள் கேட்கப்படும். அந்த நபருக்கு அந்த மொழி எவ்வளவு தெரியும் என்பதை தெரிந்துக்கொள்ளும் விதமாக அவை இருக்கும். அதாவது Basic, Immediate மற்றும் Advanced என்ற ஆப்ஷன்கள் தோன்றும்.

இதையும் படிங்க : மெட்டா ஏஐ டிரான்ஸ்லேஷன் வசதி – இனி ஒரே வீடியோவை அனைத்து மொழிகளிலும் பகிரலாம்!

பயனர்கள் அவர்களுக்கு அந்த மொழியில் இருக்கும் அனுபவத்தை பகிர்ந்த பிறகு அதற்கான கேட்கும் பயிற்சி மற்றும் பேசும் பயிற்சி வழங்கப்படும். இந்த அம்சம் தற்போது இரண்டு மொழிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. அதாவது ஆங்கிலத்தில் இருந்து ஸ்பேனிஷ் (Spanish) மற்றும் பிரஞ்சு (French) மொழிகளில் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. இதேபோல ஸ்பேனிஷ் மற்றும் பிரஞ்சு மொழி தெரிந்தவர்களும் ஆங்கிலத்தில் பயிற்சி மேற்கொண்டு மொழியை கற்றுக்கொள்ளலாம். தற்போது வெறும் மூன்று மொழிகளில் மட்டுமே இந்த பயிற்சி வழங்கப்படும் நிலையில், இனி வரும் காலங்களில் இதில் மேலும் பல மொழிகள் இணைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.