கூகுள் மீட், ஜூம் போல வீடியோ கால் செய்ய புதிய வசதி – வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அப்டேட்
Update: : உலக அளவில் இன்று வாட்ஸ்அப் தவிர்க்க முடியாத செயலியாக மாறி வருகிறது. வெறும் செயலியாக இருந்த இந்த செயலி, விடியோ கால் முதல் யுபிஐ வரை பல சேவைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப்பின் புது அப்டேட் குறித்து பார்க்கலாம்.

வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை இன்று உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெறும் மெசேஜ் அனுப்பும் செயலியாக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் இன்று வீடியோ கால், யுபிஐ (UPI) வசதி, டாக்குமென்ட்கள் அனுப்பும் வசதி என மிகப்பெரும் அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. குறிப்பாக உறவுகளுடன் நண்பர்களுடன் தொடர்புகொள்ள என இருந்த வாட்ஸ்அப் இன்று வேலை சார்ந்தும் பணியாளர்களுக்கு மிகப்பெரிய பலனளிக்கிறது. பல நிறுவனங்கள் வாட்ஸ்அப்பில் மீட்டிங் நடத்துகின்றன. இந்த நிலையில் கூகுள் மீட் மற்றும் ஜூம் போன்ற செயலிகளுக்கு போட்டியாக வாட்ஸ்அப் தனது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் கால்களுக்கு செட்யூல் வசதி
இந்த அம்சம் மூலம் வீடியோ கால்களை முன் கூட்டியே திட்டமிடலாம். இதற்காக தனி காலெண்டர் உருவாக்கி வைக்கலாம். இதனால் மீட்டிங் தொடங்கும் முன்னே பயனர்களுக்கு அறிவிப்பு வெளியாகும். இந்த அமசம் கூகுள் மீட், டீம்ஸ் போன்ற செயலிகளில் உள்ள வசதியைப் போல இது செயல்படும்.
இதனையும் படிக்க : வாட்ஸ்அப்பில் மோசடிகளை தடுக்க புதிய அம்சம் – மெட்டா அறிவிப்பு




Raise Hand வசதி
வீடியோ கான்ஃபிரென்ஸில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது, இடையூறு இல்லாமல் பேசும் வாய்ப்பை பெற Raise Hand என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அலுவலக மீட்டிங்கில் ஒரு ஒழுங்குமுறையுடன் பேசலாம்.
கால்ஸ் டேபில் புதிய வடிவமைப்பு
புதிய அப்டேட்டில் கால்ஸ் டேபிற்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் வரவிருக்கும் கால் விவரங்கள் பங்கேற்கும் நபர்கள் போன்றவற்றை எளிதாக பார்க்கலாம். கால் இணைப்பையும் பிறருடன் பகிர முடியும்.
முழுமையான பாதுகாப்பு
வாட்ஸ்அப் கால் போலவே, இனி வீடியோ காலும் End-t0-ENd Encryption பாதுகாப்பில் இயங்கும். அதாவது உங்கள் உரையாடலை மூன்றாம் தரப்பினர் பார்க்க முடியாது.
இதையும் படிக்க : இந்தியாவில் அசுர வளர்ச்சி அடையும் யுபிஐ.. ஒரே நாளில் 707 மில்லியன் பண பரிவர்த்தனை!
இந்த வீடியோ கால் வசதிகளுடன் மெட்டா ஏஐ வசதிகளும் மேம்படுத்தப்படவிருக்கின்றன. ஆண்ட்ராய்டு பதிப்பில் ஏற்கனவே வாய்ஸ் சப்போர்ட் வசதி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இது சிரி ஹாலோ ஐகான் இருக்கும். பயனர்கள் குரல் மூலம் கேள்விகளை கேட்கலாம். அதற்கு சரியான பதில்களை மெட்டா ஏஐ நமக்கு தரும். அதற்கு சோர்ஸ் லிங்க்கும் நமக்கு அளிக்கப்படும். இதனை பயன்படுத்த விரும்பினால் நீங்கள் மெட்டாவிற்கு உங்கள் மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கரை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டியிருக்கும்.
இந்த வசதிகளும் உலக அளவில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்டவிருக்கின்றன. இனி வரவிருக்கும் நாட்களில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த அப்டேட்டுகளை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.