Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து நேரடியாக புரொஃபைல் போட்டோ மாற்றலாம்

WhatsApp New Feature Update : வாட்ஸ்அப்பில் இனி நேரடியாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போட்டோக்களை மாற்ற முடியும். இந்த வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பிற பயனர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் எப்படி செயல்படும் என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து நேரடியாக புரொஃபைல் போட்டோ மாற்றலாம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Jul 2025 20:23 PM

மெட்டா (Meta) நிறுவனம் தனது சமூக ஊடக செயலிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம், இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஃபேஸ்புக்கிலிருந்து உங்கள் புரொஃபைல் புகைப்படத்தை நேரடியாக இறக்குமதி செய்யும் வசதியை வழங்குகிறது. வாட்ஸ்அப் (Whatsapp) ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.25.21.23-ல் இந்த புதிய அம்சம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சத்தை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். பிற பயனாளர்களுக்கும் விரைவில் இது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை, வாட்ஸ்அப்பில் புரொஃபைல் போட்டோவை மாற்ற,கேமரா மூலம் போட்டோ எடுப்பது, கேலரியில் இருந்து தேர்வு செய்வது, ஏஐ போட்டோ  போன்ற ஆப்சன்கள் இருந்தன. ஆனால், இனி உங்கள் இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக் புரொஃபைல் புகைப்படத்தை நேரடியாக தேர்வு செய்து பயன்படுத்தும் வசதியும் கிடைக்கும்.

இதையும் படிக்க : இளைஞர்களை ஈர்க்கும் மெட்டாவின் புதிய Imagine Me அம்சம்.. அப்படி என்ன சிறப்பு அதில்?

எப்படி செயல்படுகிறது?20032

பயனாளர்கள் தங்கள் வாட்ஸ்அப் Settings > Profile > Edit சென்று, புதிய ‘Instagram’ மற்றும் ‘Facebook’ என்ற இரண்டு விருப்பங்களை காணலாம். இவற்றில் ஒன்றை தேர்வு செய்தால், அதில் இருந்து ஒரு போட்டோவை தேர்வு செய்து புரொஃபைல் போட்டோவாக வாட்ஸ்அப்பில் மாற்றலாம். . இந்த அம்சத்தை பயன்படுத்த, உங்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள் அனைத்தும் Meta Accounts Center-இல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வசதி மெட்டா நிறுவனத்தால் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யாருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்?

பலர் தங்கள் பழைய ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டா புகைப்படங்களை வாட்ஸ்அப்பிலும் மீண்டும் பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் அந்த புகைப்படங்களை மீண்டும் கண்டுபிடித்து, ஸ்க்ரீன்‌ஷாட் எடுத்து, வைத்தால் அவை தரம் குறைவானதாக இருக்கும். இப்போது, நேரடியாக அந்த புகைப்படத்தை இழுத்து பயன்படுத்தலாம் என்பதால் இந்த அம்சம் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இதையும் படிக்க : ப்ளூ டிக் பிரச்னை இல்லாமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை பார்க்க வேண்டுமா? இந்த டிரிக்கை டிரை பண்ணுங்க

வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்கள்

  • இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸை நேரடியாக வாட்ஸ்அப்பில் பகிர முடியும்.

  • வாட்ஸ்அப் Business பயனாளர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலில் வாட்ஸ்அப் சாட் பட்டன் சேர்க்கலாம், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம்.

வாட்ஸ்அப்பில் இந்த புதிய இன்டெக்ரேஷன் அம்சம், மெட்டாவின் சமூக ஊடகங்களை மேலும் ஒருங்கிணைக்கும் முக்கியமான படியாகும். ஒரே இடத்தில் பல செயலிகளை இணைத்து, பயனாளர்களுக்கு எளிதாக செயல்பட இந்த முயற்சி பெரிதும் பாராட்டப்படுகின்றது.