ப்ளூ டிக் பிரச்னை இல்லாமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை பார்க்க வேண்டுமா? இந்த டிரிக்கை டிரை பண்ணுங்க
Smart WhatsApp Use : வாட்ஸ்அப் தற்போது தவிர்க்க முடியாத செயலியாக மாறியிருக்கிறது. நமக்கு வரும் மெசேஜை நாம் பார்க்கும்போது அதனை உறுதி செய்ய அவர்களுக்கு ப்ளூ டிக் காட்டப்படும். அதனை சில டிரிக்ஸ் மூலம் தவிர்க்கலாம். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் (WhatsApp) மனிதர்களுக்கு தவிர்க்க முடியாத கருவியாக மாறியிருக்கிறது. வாட்ஸ்அப் இல்லாமல் ஒருநாள் கூட வாழ்வது மிகவும் கடினம் என்ற நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு வாட்ஸ்அப் மெசேஜை நாம் பார்க்கும்போது, அதனை அனுப்பியவருக்கு நாம் படித்ததை உறுதி செய்துகொள்ள ப்ளூ டிக் (Blue Tick) காட்டப்படும். நம் குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசும்போது இது பிரச்னை இல்லை. ஆனால் வேலை சார்ந்து இது சிக்கலை ஏற்படுத்தும். அதாவது அலுவலகத்தில் இருந்து நமக்கு வரும் மெசேஜை நாம் பார்ப்பது தெரியக் கூடாது என நினைக்கிறார்கள். இதற்காக சிலர் ப்ளூ டிக் ஆப்சனை ஆஃப் செய்துவிடுகிறார்கள். ஆனால் இதனையும் தற்போது கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் மற்றவருக்குத் தெரியாமல் மெசேஜைப் பார்க்க விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு டிரிக்கை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் மெசேஜ் பார்ப்பது மற்றவருக்குத் தெரியாது. அந்த டிரிக்ஸ் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ப்ளூ டிக் பிரச்னை இல்லாமல் வாட்ஸ்அப்களில் மெசேஜை பார்ப்பது எப்படி?
வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்த பிறகும் ப்ளூ டிக் வருவதைத் தவிர்க்க, உங்கள் போனில் ஒரு சிறிய மாற்றத்தை செய்ய வேண்டும். வாட்ஸ்அப்பின் சிறப்பு விட்ஜெட்டை போனின் ஹோம் பகுதியில் வைக்க வேண்டும். இதற்காக, உங்கள் போனின் ஹோம் பேஜை நீண்ட நேரம் அழுத்திப் பிடித்தால், விட்ஜெட் ஆப்சன் தோன்றும். அங்கு, வாட்ஸ்அப்பைத் தேர்ந்தெடுத்து, ஹோம் பகுதியில் 4 X 2 அளவு விட்ஜெட்டை அமைக்கவும்.




இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் ப்ளூ டிக் பெறுவது எப்படி? யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இந்த விட்ஜெட்டின் சிறப்பு என்னவென்றால், இது உங்கள் தொலைபேசியின் முகப்புத் திரையில் ஒரு வாட்ஸ்அப் சாளரத்தைக் காண்பிக்கும். இந்த விண்டோவில் புதிய மேசெஜ்களை நீங்கள் பார்க்கலாம். மேலும் இந்த விண்டோவை நீங்கள் ஸ்குரோல் செய்வதன் மூலம் நீண்ட மெசேஜ்களைப் படிக்கலாம். இங்குள்ள சிறப்பு என்னவென்றால், விட்ஜெட் மூலம் மற்றவர் படிக்கும் செய்திகளுக்கு நீல நிற டிக் குறியீடுகள் தோன்றாது. எனவே நீங்கள் இன்னும் மேசேஜை படிக்கவில்லை என்றே உங்களுக்கு அனுப்பவியவர் நினைப்பார்.
இதையும் படிக்க: ஏஐ சாட் முதல் வீடியோ கால் வரை… முழுமையான வணிகதளமாக மாறும் வாட்ஸ்அப்
இந்த அம்சத்தில் உள்ள சிக்கல்?
- இந்த விட்ஜெட்டைப் பயன்படுத்தும் போது இரண்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முதலில் இந்த விட்ஜெட்டை ஸ்குரோல் செய்து மட்டுமே மெசேஜ்களைப் பார்க்க வேண்டும்.
- ஒருவேளை நீங்கள் மெசேஜை கிளிக் செய்தால், வாட்ஸ்அப் ஒபன் ஆகும். இதனால் நீங்கள் அந்த மெசேஜை பார்த்ததாக ப்ளூ டிக் தோன்றும்.
- இரண்டாவதாக, இந்த விட்ஜெட் ஹோம் பகுதியில் இருப்பதால், உங்கள் பிரைவசி குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். யாராவது உங்கள் தொலைபேசியின் முகப்புத் திரையைப் பார்த்தால், அவர்களால் உங்கள் செய்திகளை எளிதாகப் படிக்க முடியும். எனவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.