Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : இனி வாட்ஸ்அப்பிலே Document ஸ்கேன் செய்யலாம்.. வந்தாச்சு அசத்தல் அம்சம். பயன்படுத்துவது எப்படி?

WhatsApp's New In-App Document Scanner | மெட்டா நிறுவனம் பயனர்களின் நலனுக்காக வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது in - app document scanner அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனை பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலியிலே ஆவணங்களை ஸ்கேன் செய்துக்கொள்ளலாம்.

WhatsApp : இனி வாட்ஸ்அப்பிலே Document ஸ்கேன் செய்யலாம்.. வந்தாச்சு அசத்தல் அம்சம். பயன்படுத்துவது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Jul 2025 14:19 PM

மெட்டா (Meta) நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், பயனர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஒரு அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பயனர்கள் வேறு ஒரு செயலியை பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் (Document Scan) செய்யாமல், வாட்ஸ்அப் செயலியிலே ஆவணங்களை ஸ்கேன் செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சங்கள்

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், வாட்ஸ்அப் செயலிக்கு பில்லியன் கணக்கான தினசரி பயனர்கள் உள்ளனர். வாட்ஸ்அப் இவ்வளவு முக்கிய செயலியாக உள்ள நிலையில், அதனை பயன்படுத்தும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், மெட்டா பல அசத்தல் அம்சங்களை வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட மொத்தமாக 6 அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய மற்றும் அட்டகாசமான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ்அப்பிலே ஆவணங்களை ஸ்கேன் செய்துக்கொள்ளலாம்

ஜிமெயில் செயலிக்கு பிறகு தகவல்களை பரிமாற, ஆவணங்களை பகிர பெரும்பாலான பொதுமக்கள் வாட்ஸ்அப் செயலியை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்போது அனைத்து டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஆவணங்களை கொரியர் அல்லது தபால் நிலையங்கள் மூலம் அனுப்பாமல் பொதுமக்கள் செயலிகள் மூலம் ஸ்கேன் செய்து அனுப்பிவிடுகின்றனர். இந்த நிலையில், வேறு செயலியில் ஆவணங்களை ஸ்கேன் செய்து அதனை பதிவிறக்கம் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பி வந்த நிலையில், தற்போது பயனர்களின் கஷ்டத்தை குறைக்க வாட்ஸ்அப் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இனி ஆவணங்களை வாட்ஸ்அப் செயலியிலே ஸ்கேன் செய்துக்கொள்ளலாம். வேறு செயலிகளை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் in – app document scanner அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.  இதனை பயன்படுத்தி பயனர்கள் வாட்ஸ்அப் செயலியிலே ஸ்கேன் செய்துக்கொள்ளலாம். அவ்வாறு ஸ்கேன் செய்யப்படும் ஆவணங்களை PDF வடிவில் சேமிக்கவும், அதனை பாதுகாப்பாக அனுப்பவும்  இந்த அம்சம் பயனுள்ளதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்படுத்துவது எப்படி?

  1. வாட்ஸ்அப் செயலிக்கு சென்று அதில் உள்ள Document Sharing என்ற பிரிவுக்கு செல்ல வேண்டும்.
  2. பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள Document Scan என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அப்போது உங்களது கேமரா ஆன் ஆகும்.
  4. இந்த நிலையில், உங்களுக்கு எதனை ஸ்கேன் செய்ய வேண்டுமோ அதனை மொபைல் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் மிக சுலபமாக ஸ்கேன் செய்யலாம்.

இந்த ஆவணங்களை வாட்ஸ்அப்பில் வேறு பயனர்களுக்கு அனுப்பிக்கொள்ளலாம் என்றும், அவ்வாறு அனுப்பப்படும் ஆவணங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.