AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WhatsApp : அடடா வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு அம்சமா?.. அசந்து போய்டுவீங்க!

WhatsApp's New AI Message Summary Feature | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் பயனர்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சாட் சம்மரி என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், அது என்ன அம்சம், அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

WhatsApp : அடடா வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு அம்சமா?.. அசந்து போய்டுவீங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Jun 2025 15:55 PM IST

மெட்டா (Meta) நிறுவனம் பயனர்களின் நலனுக்காகவும், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் வாட்ஸ்அப்பில் (WhatsApp) பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அசத்தலான அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் வரும் குறுஞ்செய்திகளை சம்மரியாக (Summary) படிக்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் சேட்களுக்குள் சென்று குறுஞ்செய்தியை படிக்காமல் யார் யார் என்ன என்ன தகவலை கூறியிருக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். அத்தகைய ஒரு அசத்தலான அம்சத்தை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்தன் நிலையில், இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிரடி அம்சங்களை அறிமுகம் செய்து வரும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உலக அளவில் பில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய பயனர்களை ஈர்க்கவும் வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் பல அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அனிமேஷன் ஸ்டிக்கர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட அம்சங்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப்பில் அறிமுகமான சம்மரி அம்சம் – சிறப்புகள் என்ன என்ன?

வாட்ஸ்அப் ஒரு சிறந்த தகவல் பரிமாற்ற செயலியாக உள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப்பை  பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்கின்றனர். இவ்வாறு பலருடன் தகவல்களை பரிமாறும் நிலையில், வாட்ஸ்அப்பில் அதிகப்படியான குறுஞ்செய்திகள் வரும். சில சமயங்களில் அவற்றை முழுமையாக படிப்பது கடினமாக இருக்கும். இந்த நிலையில் தான் வாட்ஸ்அப்பின் இந்த சம்மரி அம்சம் கை கொடுக்கும். அதனை பயன்படுத்தி குறுஞ்செய்திகளில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை சுருக்கமாக தெரிந்துக்கொள்ளலாம்.

உதாரணமாக குழுவில் அனைவரும் ஒரே நிறத்தில் உடை எடுக்க விரும்புகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில் வாட்ஸ்அப் சம்மரியில், குழுவில் அனைவரும் ஒரே நிறத்தில் உடை எடுக்க விரும்புகின்றனர். இரண்டு பேர் பச்சை நிறத்தையும், ஆறு பேர் நீல நிறத்தை தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு அதில் நிகழத்தப்பட்டிருக்கும் உரையாடலை சம்மரியாக மாற்றிக் கொடுக்கும். இந்த அம்சம் தற்போது அமெரிக்காவில், ஆங்கில மொழியில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us