WhatsApp : வாட்ஸ்அப்பில் ஒருவர் டெலிட் செய்த குறுஞ்செய்தியை சுலபமாக படிக்கலாம்.. எப்படி தெரியுமா?
View Deleted WhatsApp Messages | வாட்ஸ்அப் செயலியில் ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை டெலிட் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு டெலிட் செய்யப்படும் குறுஞ்செய்தியை எதிரில் இருக்கும் நபர் பார்ப்பதற்கான அனுமதி மறுக்கப்படும். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் எதிர் தரப்பு நபர் அனுப்பிவிட்டு டெலிட் செய்த குறுஞ்செய்தியை பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

உலக அளவில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் தகவல் பரிமாற்றம் செய்வது, குறுஞ்செய்தி அனுப்புவது உள்ளிட்ட காரணங்களுக்காக வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலியில் நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளை டெலிட் செய்வதற்கான அம்சம் உள்ளது. அதனை பயன்படுத்தி தவறுதலாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை நாம் டெலிட் செய்துவிடலாம். தவறுதலாக அனுப்பப்பட்டதால் தான் அந்த குறுஞ்செய்திகள் டெலிட் செய்யப்பட்டு இருந்தாலும், அதில் என்ன உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள நமக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். ஆனால், வாட்ஸ்அப்பின் சட்ட விதிகளின் படி ஒருவர் டெலிட் செய்த குறுஞ்செய்தியை எதிரே இருக்கும் நபர் பார்ப்பதற்கு அனுமதி இல்லை. தனிநபர் உரையாடல் மற்றும் குழு உரையாடல் இவை இரண்டுக்கும் இது பொருந்தும். ஆனால் இதற்கு ஒரு வழி உள்ளது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி
உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முதன்மை செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம், வீடியோ கால், ஆடியோ கால் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இதில் பெரும்பாலான பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியமான அம்சம் தான் குறுஞ்செய்தி பகிர்தல். மற்ற அம்சங்களை போலவே இந்த குறுஞ்செய்திக்கும் வாட்ஸ்அப் பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்தி அனுப்புவதை போலவே அதனை டெலிட் செய்வதற்கான ஆப்ஷனும் உள்ளது. இவ்வாறு ஒருவர் டெலிட் செய்த குறுஞ்செய்திகளை மூன்றாம் தரப்பு செயலிகளின் உதவியுடன் பார்க்க முடியும்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் உங்கள் வேலைகளை எளிதாக்கும் 5 அம்சங்கள் – எப்படி பயன்படுத்துவது?
டெலிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி – மீண்டும் பார்ப்பது எப்படி?
வாட்ஸ்அப்பை போலவே பல மூன்றாம் தரப்பு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அவை வாட்ஸ்அப்பின் சட்ட விதிகளை பின்பற்றாது. இதன் காரணமாக அந்த செயலிகள் உரையாடல்கள் மற்றும் தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளும். எனவே தான் அவை டெலிட் செய்யப்பட்ட குறுஞ்செய்திகளை பார்க்க அனுமதி வழங்குகின்றன. இவ்வாறு மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் செயலிகளை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை உள்ளிட்டு பயன்படுத்தினால் சுலபமாக டெலிட் செய்யப்பட்ட குறுஞ்செய்திகளை பார்க்க முடியும்.
கூகுள் பிளே ஸ்டோரில் இத்தகைய பல மூன்றாம் தரப்பு செயலிகள் உள்ளன. அவற்றை ரேட்டிங் அடிப்படையில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். ஆனால், இந்த மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து அவற்றை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.