வாட்ஸ்அப்பில் ப்ளூ டிக் பெறுவது எப்படி? யாருக்கெல்லாம் கிடைக்கும்?
WhatsApp Blue Tick Guide : ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் போல வாட்ஸ்அப்பும் அதன் பயனர்களுக்கு ப்ளூ டிக் வழங்குகிறது. வாட்ஸ்அப்பில் ப்ளூ டிக் பெறுவதற்கான தகுதிகள் என்ன? எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களை போல வாட்ஸ்அப்பிலும் (WhatsApp) ப்ளூ டிக் பெற முடியும். மற்ற சமூக வலைததளங்களில் ஒருவருக்கு எவ்வளவு ஃபாலோயர்கள் இருக்கின்றனர், அவர்களது பதிவுகள் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து ப்ளூ டிக் வழங்குகின்றன. மற்ற சமூக வலைதளங்களைப் போலவே வாட்ஸ்அப்பிலும் பயனர்களின் கணக்கை வெரிஃபைடு செய்த பிறகே ப்ளூ டிக் வழங்குகிறது. ஆனால் மற்ற தளங்களுடன் ஒப்பிடும்போது, வாட்ஸ்அப்பில் நீல நிற டிக் அடையாளத்திற்கான நிபந்தனைகள் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. இந்த கட்டுரையில் வாட்ஸ்அப் பில் ப்ளூ டிக் பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன? யாருக்கு ப்ளூ டிக் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
யாருக்கெல்லாம் ப்ளூ டிக் கிடைக்கும்?
ப்ளூ டிக் எப்படி பெறுவது என்பதை தெரிந்துகொள்வதை விட, யாருக்கு ப்ளூ டிக் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். வணிகக் கணக்குகள் உள்ளவர்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் ப்ளூ டிக் வசதியை வழங்குகிறது. இது வாட்ஸ்அப்பில் ஒருவரின் செயல்பாடு மற்றும் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கணக்கு சரிபார்க்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்க ப்ளூ டிக் வழங்கும். மெட்டா வெரிஃபைடு பேட்ஜான இந்த ப்ளூ டிக், உங்களுக்கான சில அம்சங்களுடன் வரும் இதற்கு மாதாந்திர சந்தா கட்ட வேண்டியிருக்கும்.
வாட்ஸ்அப்பில், சரிபார்க்கப்பட்ட வணிகர்களிடம் இருந்து வரும் அழைப்புகள், புரொஃபைல், மெசேஜ் பகுதி போன்ற இடங்களில் ப்ளு டிக் காணப்படும். இது ஒரு பிசினஸ் பக்கம் உண்மையானதா இல்லையா என்பதை உறுதி செய்யும் அடையாளமாக இருக்கும்.




நீல டிக்கிற்கு எப்படி விண்ணப்பிப்பது?
-
முதலில் உங்கள் மொபைலில் உள்ள WhatsApp Business App-ஐத் திறக்கவும்.
- ஆண்டிராய்டு பயனர்கள் செட்டிங்ஸில் உள்ள டூல்ஸ் என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Meta Verified என்பதை தேர்வு செய்யவும். அதே போல ஐபோனிலும் செட்டிங்ஸில் உள்ள டூல்ஸ் பகுதியில் Meta Verified என்ற பக்கத்தை தேர்வு செய்யலாம்.
-
Meta Verified என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் தேவைக்கு ஏற்ப ஒரு சந்தா (subscription) திட்டங்கள் காண்பிக்கப்படும். அவற்றில் உங்களுக்கு ஏற்ற தேர்ந்தெடுத்து, பணம் செலுத்து வேண்டியிருக்கும்.
வாட்ஸ்அப் ப்ளூ டிக்கிற்கான சந்தா தொகைகள் ரூ.639 முதல் ரூ.18,900 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது உங்கள் வணிக பயன்பாடு, வெரிஃபைடு பயன்பாடு மற்றும் சேவைகள் அடிப்படையில் மாறும். விருப்பத்துக்கு ஏற்ப மாத மற்றும் வருட சந்தாவை தேர்ந்தெடுக்கலாம். இது வாட்ஸ்அப் பிசினஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கும். இதன் மூலம் வியாபார ரீதியாக நிறுவனங்களையோ, தனி நபரையோ தொடர்புகொள்ளும்போது உங்களை நம்பகத்தன்மை உள்ள ஆளாக காட்டும். இதனால் உங்கள் வணிகம் மேம்பட வாய்ப்பு ஏற்படும்