Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

UPI : இந்தியாவில் அசுர வளர்ச்சி அடையும் யுபிஐ.. ஒரே நாளில் 707 மில்லியன் பண பரிவர்த்தனை!

India Hits New UPI Record | இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ சேவையை பயன்படுத்தி தங்களது அன்றாட தேவைகளுக்கான பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் ஒரு நாளுக்கு மேற்கொள்ளப்படும் யுபிஐ பண பரிவர்த்தனை 700 மில்லியனாக அதிகரித்துள்ளது.

UPI : இந்தியாவில் அசுர வளர்ச்சி அடையும் யுபிஐ.. ஒரே நாளில் 707 மில்லியன் பண பரிவர்த்தனை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Aug 2025 12:35 PM

ஒரே நாளில் 707 மில்லியன் யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. யுபிஐ சேவையை நிர்வகிக்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவில் யுபிஐ எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைகிறது என்பதை காட்டும் விதமாக அமைந்துள்ளது. சமீப காலமாக இந்திய மக்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்தியா இந்த புதிய இலக்கை எட்டியுள்ளது. இந்த நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை குறித்து என்பிசிஐ வெளுயிட்டுள்ள தரவுகள் குறித்து விரிவாக் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் யுபிஐ சேவை

இந்தியாவில் யுபிஐ சேவை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக யுபிஐ சேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கடைகோடி கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. ஒரு ரூபாய் முதல் ரூ.50 ஆயிரம் மற்ரும் 60 ஆயிரம் என ஆயிரக்கணக்கிலும் மக்கள் இந்த யுபிஐ சேவையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். ஒருவர் மற்றொருவருக்கு மிக விரைவாக பணம் அனுப்ப இந்த யுபிஐ சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ள நிலையில் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க : UPI : ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் Cashback.. ஆண்டுக்கு ரூ.7,500.. பெறுவது எப்படி?

மிக வேகமாக வளர்ந்து வரும் யுபிஐ சேவை

இந்தியாவில் சமீப காலமாகவே பொதுமக்கள் மத்தியில் யுபிஐ சேவை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் யுபிஐ சேவை பயன்பாடு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஒரு நாளுக்கு 350 மில்லியன் யுபிஐ பண பரிவர்த்தனைகள் நடைபெற்ற நிலையில் 2024, ஆகஸ்ட் மாதத்தில் அது 500 மில்லியனான உயர்த்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 700 மில்லியன் என்ற இலைக்கை அடைந்துள்ளது. ஒரு நாளுக்கு ஒரு பில்லியன் யுபிஐ பண பரிவர்த்தனை என்ற இலைக்கை நோக்கி இந்திய அரசு வேகமாக பணியாற்றி வருகிறது.

இதையும் படிங்க : PayPal World : இனி உலகின் எந்த மூலையில் இருந்தும் யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம்!

ஒரே நாளில் 707 மில்லியன் யுபிஐ பரிவர்த்தனை

2025, ஜூலை மாதத்தில் ஒரு நாளுக்கான யுபிஐ பண பரிவர்த்தனை 650 மில்லியனாக இருந்த நிலையில், தற்போது அது அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 02, 2025 அன்று மட்டும் யுபிஐ மூலம் 707 மில்லியன் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது அன்றைய தினம் மட்டும் 70 கோடி முறை யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.