Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

UPI : ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் Cashback.. ஆண்டுக்கு ரூ.7,500.. பெறுவது எப்படி?

7,500 Rupees Cashback on UPI Transactions | இந்தியாவை பொருத்தவரை பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிக அளவு யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.7,500 வரை கேஷ்பேக் பெறலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.

UPI : ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் Cashback.. ஆண்டுக்கு ரூ.7,500.. பெறுவது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Jul 2025 00:01 AM

இந்தியா டிஜிட்டல் இந்தியா (Digital India) என்ற இலக்கை நோக்கி மிக வேகமாக பயணம் செய்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு மிகப்பெரிய சான்று என்னவென்றால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்கின்றனர். இந்தியாவின் கடைக்கோடி கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை பரவலாக யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. சிறிய பொருட்களை வாங்குவது முதல் பெரிய பொருட்களை வாங்குவது வரை என பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ செயலிகளை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், யுபிஐ பயன்படுத்துவதன் மூலம் ரூ.7,500 வரை கேஷ்பேக் (Cashback) பெறலாம் என்றால் உங்களால் நம்ப முடியுமா?.

யுபிஐ பண பரிவர்த்தனைக்கு கேஷ் பேக் – ரூ.7,500 வரை பெறலாம்

பொதுவாக போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது எப்போதாவது ஒருமுறை கேஷ்பேக் கிடைக்கும். ஆனால், நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேஜ் பெற முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. உண்மை தான் அதற்காக நீங்கள் DCB வங்கியின் சிறப்பு கணக்கை தொடங்க வேண்டும். இந்த கணக்கின் பெயர் ஹேப்பி சேவிங்க்ஸ் அக்கவுண்ட் (Happy Savings Account). இந்த கணக்கின் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.625 வரையிலும், ஒரு வருடத்திற்கு ரூ.7,500 வரையிலும் கேஷ்பேக் பெற முடியும்.

இதையும் படிங்க : Personal Loan : 10 நிமிடங்களுக்கும் குறைவாக தனிநபர் கடன் பெறலாம்.. இந்த அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ் பேக் பெறுவது எப்படி?

முதலில் டிசிபி வங்கியில் ஒரு ஹேப்பி சேவிங்ஸ் கணக்கை திறக்க வேண்டும். பின்னர் அந்த கணக்கை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது அந்த பரிவர்த்தனைகளுக்கு வங்கி ஒவ்வொரு காலாண்டிலும் உங்களுக்கு கேஷ்பேக் வழங்கும். அதாவது ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.625 மற்றும் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.7,500 உங்களுக்கு கேஷ்பேக்காக கிடைக்கும்.

பலனை பெற பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

  • இவ்வாறு பண பரிவர்த்தனைக்கு கேஷ்பேக் பெற வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.10,000 சராசரி மாத இருப்பு இருக்க வேண்டும்.
  • வங்கி கணக்கில் சராசரி காலாண்டு இருப்பு ரூ.25,000 அல்லது அதற்கும் மேல் இருக்க வேண்டும்.
  • கேஷ்பேக் பெறுவதற்கு ஒவ்வொரு பரிவர்த்தனையும் ரூ.500-க்கு மேல் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த விதிகளை பின்பற்றி பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பட்சத்தில், உங்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.