Personal Loan : 10 நிமிடங்களுக்கும் குறைவாக தனிநபர் கடன் பெறலாம்.. இந்த அம்சங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
Instant Personal Loans in India | பெரும்பாலான பொதுமக்களுக்கு உடனடி கடன் தேவைகள் ஏற்படும். இந்த சமயங்களில் வங்கிகளுக்கு சென்று கடனுக்கு விண்ணப்பித்து பணம் கைக்கு கிடைக்கும் வரை காத்திருப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். இந்த நிலையில், இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் மிக விரைவாக 10 நிமிடங்களுக்கும் குறைவாக கடன்களை பெற முடியும்.

மனிதர்களுக்கு எப்போதும் நிதி தேவை இருந்துக்கொண்டே இருக்கும். சில சமையங்களில் எதிர்பாராத வேளைகளில் கூட நிதி தேவை ஏற்பட கூடும். இத்தகைய சூழல்களில் பொதுமக்கள் தாங்கள் பணம் சேமித்து வைத்திருந்தால் அதனை பயன்படுத்துவார்கள். அவ்வாறு இல்லையென்றால் நிலமை மிகவும் மோசமாக மாறிவிடும். இத்தகைய இக்கட்டான சூழல்களில் அவர்கள் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். இவ்வாறு கடன் தேவைப்படும் பொதுமக்களுக்கு உடனடியாக கடன் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆனால், மிக விரைவாக தனிநபர் கடன் பெற சில வழிகள் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உடனடி கடன் பெற உதவும் அம்சங்கள் – என்ன என்ன?
சில சிறப்பு அம்சங்கள் மூலம் பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள உடனடி கடன்கள் வழங்கப்படுகின்றன.
டிஜிட்டல் தளங்கள்
சில நிதி நிறுவனங்கள் டிஜிட்டல் தளங்கள் மூலம் பொதுமக்களுக்கு கடன் வழங்குகின்றன. இத்தகைய கடன்களை பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்ற அவசியல் இல்லை. ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட சில அடிப்படை ஆவணங்கள் இருந்தாலே இந்த டிஜிட்டல் தளங்கள் மூலம் கடன் பெற முடியும். இந்த வகை கடன்களை மிக குறுகிய கால அளவீட்டில் அதாவது 10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்திலே பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.




மொபைல் செயலிகள்
பொதுமக்களுக்கு உடனடி கடன்களை வழங்குவதற்காக ஏராளமான செயலிகள் உள்ளன. இந்த செயலிகள் மிக விரைவாக பொதுமக்களுக்கு கடன் வழங்குகின்றன. மொபைல் செயலி மூலம் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி விவரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் பட்சத்தில் மிக சுலபமாக இந்த செயலிகள் மூலம் கடன் பெறலாம். இந்த செயலிகள் மூலம் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெறலாம்.
இதையும் படிங்க : ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20, 000 வருமானம் வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
நேரடி கடன்கள்
சில தனியார் கடன் நிறுவனங்கள், NBFC (Non- Banking Financial Companies) நிறுவனங்கள் உள்ளூர் அடிப்படையிலான உடனடி கடன்களை வழங்குகின்றன. இந்த கடன்களுக்கு அடையாள ஆவணங்கள் மற்றும் வங்கி பாஸ் புக் ஆகியவை இருந்தால் மட்டுமே போதுமானது. இணைய தளங்கள், மொபைல் செயலிகளை போலவே இதிலும் விரைவாக கடன் பெற முடியும்.
மேற்குறிப்பிட்ட இந்த கடன் அம்சங்கள் விரைவாகவும், குறைந்த ஆவணங்களுடன் கடன் வழங்கினாலும் அவற்றில் சில சிக்கல்களும் உள்ளன. அதாவது குறைந்த திருப்பி செலுத்தும் காலம், அதிக வட்டி, தனிநபர் தகவல்கள் பகிரப்படுவது உள்ளிட்டவை உள்ளன. எனவே நீங்கள் கடன் பெறுவதற்கு முன்னதாக இவை அனைத்தையும் சோதனை செய்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.