Home Loan : எவ்வளவு மாத சம்பளம் வாங்கினால் எவ்வளவு ரூபாய் வரை வீட்டு கடன் கிடைக்கும்?.. தெரிந்து கொள்ளுங்கள்!
Housing Loan Calculation | வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என நினைக்கும் சாமானியர்களுக்கு வீட்டு கடன் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இந்த நிலையில், ஒருவர் எவ்வளவு மாத ஊதியம் வாங்கினால் அவருக்கு எவ்வளவு ரூபாய் வரை வீட்டு கடன் வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெரும்பாலான மனிதர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பலர் சிறுக சிறுக சேர்த்து வீட்டை கட்டுவர். ஆனால், போதுமான வருமானம் மற்றும் சேமிப்பு இல்லாதவர்களுக்கு அது வெறும் கனவாக மட்டுமே இருக்கும். இவ்வாறு சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பதை ஆசையாக கொண்டவர்களின் ஆசைகளை நிறைவேற்ற வீட்டு கடன்கள் பெரும் அளவில் உதவி செய்கின்றன. தங்களுக்கென சொந்தமாக வீடு கட்ட அல்லது வாங்க வேண்டும் என நினைக்கும் பெரும்பாலான பொதுமக்கள் வங்கியில் வீட்டு கடன் பெற்று அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த நிலையில், எவ்வளவு மாத ஊதியம் வாங்கினால் எவ்வளவு வீட்டு கடன் பெறலாம், அதற்கு மாத தவணை எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எவ்வளவு சம்பளத்திற்கு எவ்வளவு வீட்டு கடன் கிடைக்கும்?
ஒருவரின் மாத சம்பளத்தை பொருத்து அவருக்கு வழங்கப்படும் வீட்டு கடன் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினால் எவ்வளவு ரூபாய் வரை வீட்டு கடன் பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாதம் ரூ.10,000 சம்பளம்
ஒருவர் மாதம் ரூ.10,000 சம்பளம் வாங்குகிறார் என்றால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு ரூ.5,200 மாத தவணை செலுத்த வேண்டியது இருக்கும்.




மாதம் ரூ.20,000 சம்பளம்
ஒருவர் மாதம் ரூ.20,000 சம்பளம் வாங்குகிறார் என்றால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு ரூ.10,400 மாத தவணை செலுத்த வேண்டியது இருக்கும்.
இதையும் படிங்க : லோனை முன்கூட்டியே அடைத்தால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா? உண்மை என்ன?
மாதம் ரூ.30,000 சம்பளம்
ஒருவர் மாதம் ரூ.30,000 சம்பளம் வாங்குகிறார் என்றால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.18 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு ரூ.15,600 மாத தவணை செலுத்த வேண்டியது இருக்கும்.
மாதம் ரூ.50,000 சம்பளம்
ஒருவர் மாதம் ரூ.50,000 சம்பளம் வாங்குகிறார் என்றால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு ரூ.26,000 மாத தவணை செலுத்த வேண்டியது இருக்கும்.
மேற்குறிப்பிட்ட அளவீடுகள் வங்கிகள் பொதுவாக பின்பற்றும் அளவீடுகளை மையமாக கொண்டு கணக்கிடப்ப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கிகளும் தங்களுக்கென தனி அளவுகோளை பின்பற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.