Credit Score : கடனை திருப்பி செலுத்திய பிறகும் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படவில்லையா?.. அப்போ இத பண்ணுங்க!
Delayed Credit Score Update | பொதுவாக கடனை செலுத்திய பிறகும் கிரெடிட் ஸ்கோரை அப்டேட் செய்ய வங்கிகள் காலம் தாமதம் செய்யும். இந்த நிலையில், 30 முதல் 60 நாட்கள் வரை கிரெடி ஸ்கோர் அப்டேட் செய்யப்படாமலே இருக்கும். இந்த சூழலில் கிரெடிட் ஸ்கோரை அப்டேட் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் தங்களது கிரெடிட் ஸ்கோர்களை (Credit Score) முறையாக பராமரிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. விலைவாசி உயர்வு, தேவை அதிகரிப்பு, எதிர்பாராத செலவு உள்ளிட்ட காரணங்களுக்காக பொதுமக்களுக்கு நிதி தேவை ஏற்படுகிறது. வரவுக்கு மீறிய செலவு வரும் போது பெரும்பாலான பொதுமக்கள் வங்கிகளில் கடன் வாங்க முடிவு செய்கின்றனர். அவ்வாறு வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றால் இந்த கிரெடிட் ஸ்கோர் மிகவும் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், கிரெடிட் ஸ்கோரில் ஏராளமான சிக்கல்களை பொதுமக்கள் சந்திக்கின்றனர். அதில் ஒன்றுதான் கடன் தொகையை திருப்பி செலுத்திய போது கிரெடிட் ஸ்கோரில் மாற்றமில்லால் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிரெடிட் ஸ்கோர் அப்டேட் ஆக ஏன் கால தாமதம் ஆகிறது?
ஒருவர் தான் வங்கியில் வாங்கிய தனிநபர் கடனை முழுமையாக திருப்பி செலுத்தினாலும், கடன் வழங்கிய வங்கிகள் அதனை கிரெடிட் பணியகங்களுக்கு தெரிவிக்க 30 முதல் 60 நாட்கள் வரை ஆகும். இதன் காரணமாக தான் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. இவ்வாறு கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் காலத்தில் செயலில் உள்ளது (Under Process) என தோன்றும்.
கிரெடிட் ஸ்கோரை அப்டேட் செய்ய என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் கடன் தொகையை முழுவதுமாக செலுத்தி முடித்த பிறகு உங்களது கிரெடிட் ஸ்கோரில் மாற்றம் செய்யப்படாமலே இருந்தால், நீங்கள் கடன் வாங்கிய வங்கியை தொடர்புக்கொண்டு புதுப்பித்தல் செயல்முறையை தொடங்க சொல்லுங்கள். கடன் செலுத்தி முடித்ததற்கான உறுதிபடுத்தல் ஆவணங்களை வங்கிகளிடம் கோருங்கள். இந்த செயல்முறையை செய்ததும், பெரும்பாலான வங்கிகள் தரவு அறிக்கையில் கிரெடிட் ஸ்கோரை அப்டேட் செய்வார்கள்.




இதையும் படிங்க : CIBIL Score: சம்பளம் அதிகரித்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்குமா? உண்மை என்ன?
கிரெடிட் ஸ்கோர் குறித்து மேல்முறையீடு செய்யலாம்
நீங்கள் கடனை திருப்பி செலுத்தி 60 நாட்களுக்கு மேல் ஆகிறது, அதுவரை கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் உங்கள் கடன் வழங்குநரின் புகார் துறையை பயன்படுத்தி அதன் மூலம் புகார் அளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கிரெடிட் ஸ்கோர் விரைவாக அப்டேட் செய்யப்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் ஒரு கடனை முழுவதுமாக செலுத்தி முடித்துவிட்டீர்கள். அடுத்த கடன் வாங்குவதற்கு உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியமானதாக உள்ளது என்ற சூழ்நிலைகளில் மேற்குறிப்பிட்ட முறைகளை பின்பற்றி மிக விரைவாகவும், எளிதாகவும் கிரெடிட் ஸ்கோரை அப்டேட் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.