Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Credit Card : கிரெடிட் கார்டு பயனர் உயிரிழந்துவிட்டால் கடனை யார் திருப்பி செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Credit Card Debt After Death | தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர் உயிரிழந்துவிட்டால் அதில் இருக்கும் கடன் தொகையை யார் செலுத்த வேண்டும் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Credit Card : கிரெடிட் கார்டு பயனர் உயிரிழந்துவிட்டால் கடனை யார் திருப்பி செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Jul 2025 13:11 PM

இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு (Credit Card) பயன்பாடு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கிரெடிட் கார்டு மூலம் தங்களது நிதி தேவைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். குறிப்பாக கிராமங்களை விட நகரங்களில் அதிக மக்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். மாதம் முழுவதும் செலவு செய்யும் பணத்தை மாத தவணையாக திருப்பி செலுத்த கிரெடிட் கார்டில் அனுமதி வழங்கப்படும் நிலையில், பலருக்கும் இது பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக குறைவான சம்பவளம் உள்ளனவர்கள் தங்களது கூடுதல் நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர் உயிரிழந்துவிட்டால் அந்த கிரெடிட் கார்டில் இருக்கும் கடனை யார் திருப்பி செலுத்துவது, அதற்கான விதிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால் கடனை யார் திருப்பி செலுத்துவது?

கிரெடிட் கார்டுகள் பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் சலுகைகளை கொண்டிருந்தாலும், அதில் பல சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக ஒருமுறை கிரெடிட் கார்டு கடனில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து மீளவே முடியாது. எனவே, கிரெடிட் கார்டு குறித்த தெளிவு மற்றும் முறையான திட்டமிடல் அவசியமாக கருதப்படுகிறது. கிரெடிட் குறித்து பலருக்கும் பல விதமான கேள்விகள் இருக்கும். அதில் பெரும்பாலான நபர்களுக்கு இருக்க கூடிட கேள்வி தான், கிரெடிட் கார்டு பயனர் இறந்துவிட்டால் அதில் இருக்கும் நிலுவை கடன் தொகையை யார் செலுத்துவது என்ற கேள்வி.

கிரெடிட் கார்டு கடனுக்கு யாரும் பொறுப்பேற்க வேண்டாம்

கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால் அவரது கடன் முடிக்கப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கிரெடிட் கார்டை பயன்படுத்திய நபரே அந்த கடனை திருப்பி செலுத்த முழுமையான பொறுப்பு கொண்டவர். எனவே, கிரெடிட் கார்டு பயன்படுத்தி வந்த நபர் உயிரிழந்துவிட்டால் அந்த கடன் அவரது குடும்பத்தினர் மீது விழாது. ஆனால், இதில் ஒரு முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, கிரெடிட் கார்டு பயனர் இறந்துவிட்டால் அவரது பெயரில் இருக்கும் சொத்துக்களில் இருந்து பணத்தை வசூல் செய்ய வங்கிகள் முயற்சி செய்யும்.

குறிப்பாக இறந்தவரின் பெயரில் ஏதேனும் சொத்து, வங்கி இருப்பு அல்லது முதலீடு இருந்தால் கடன் வழங்கி வங்கி அவற்றில் இருந்து கடன் தொகையை எடுக்க முயற்சி செய்யும். ஒருவேளை இறந்தவரின் பெயரில் சொத்து எதுவும் இல்லை என்றாலோ அல்லது அவரின் வங்கி கணக்கில் இருப்பு எதுவும் இல்லை என்றாலோ வங்கி அந்த கடனை மூடும் நிலைக்கு தள்ளப்படும். அதற்கான இழப்பையும் வங்கியே ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.