Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Credit Card: இலவச கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகள்.. விவரம் இதோ!

Zero Fee Cards : இந்தியாவில் சமீப காலமாக கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சிறு செலவுகளுக்கு மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் சில வங்கிகள் எந்த கட்டணமும் இல்லாமல் இலவச கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Credit Card: இலவச கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகள்.. விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 01 Jul 2025 21:20 PM

வங்கிகளில் தொழில்நுட்பம் அதிகரித்து வருவதால், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதாகிவிட்டது. ஆனால் அவற்றை நிர்வகிப்பது மிகவும் கடினம். பல வங்கிகள் கிரெடிட் கார்டுகளுக்கு மறைமுக கட்டணங்களை விதித்து வாடிக்கையாளர்கள் மீதான சுமையை அதிகரிக்கின்றன. பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு வருடாந்திர கட்டணம் வசூலிக்கின்றன. வங்கிகள் அதோடு நிறுத்துவதில்லை, மற்ற கூடுதல் கட்டணங்களையும் வசூலிக்கிறார்கள். இந்த சூழலில், சில வங்கிகள் சமீப காலமாக எந்தவித கட்டணமும் இல்லாமல் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக, சில வங்கிகள் வருடாந்திர கட்டணங்கள் இல்லாத கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. இந்த கட்டுரையில் வருடாந்திர கட்டணங்கள் இல்லாத கிரெடிட் கார்டுகள் குறித்து பார்க்கலாம்.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் கிளாசிக் கிரெடிட் கார்டு (IDFC First Classic Credit Card)

இந்த கிரெடிட் கார்டில்  வருடாந்திர கட்டணம் இல்லை. அதே போல இந்த கார்டை வாங்க எந்த வித சிறப்பு கட்டணமும் செலுத்த தேவையில்லை.  மேலும் வெல்கம் போனஸும் உண்டு. புதிய பயனர்கள் முதல் இஎம்ஐ பரிவர்த்தனையின் போது ரூ.1000 தள்ளுபடி பெறலாம். நீங்கள் பிரத்யேகமான கிஃப்ட் வவுச்சரை அனுபவிக்கலாம். மேலும் ரூ. 5000 முதல் ரூ.1000 வரை கேஷ்பேக் பெறலாம். திரைப்பட டிக்கெட்டுகளில் 25 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் நிரப்பும் போது தள்ளுபடி கிடைக்கும்.

அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு (Amazon Pay ICICI Credit Card)

இந்த கிரெடிட் கார்டுக்கு வருடாந்திர கட்டணம் இல்லை. மேலும், இந்த அட்டையின் தனிச்சிறப்பு என்னவென்றால், ரிவார்ட்ஸ் பாயிண்ட்களுக்கு காலாவதி தேதி இல்லை. இந்த கிரெடிட் கார்டுகளுக்கு அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு அமேசானில் பொருட்கள் வாங்கும்போது 5 சதவிகித கேஷ்பேக்கையும், பிரைம் அல்லாத பயனர்களுக்கு 3 சதவீத கேஷ்பேக்கையும், மற்றவர்களுக்கு  1 சதவிகித கேஷ்பேக்கையும் வழங்குகிறது. இந்த கிரெடிட் கார்டின் மூலம் எரிபொருள் நிரப்பும்போது தள்ளுபடியும் கிடைக்கிறது. எனவே இந்த கிரெடிட் கார்டுகள் அன்றாட செலவுகளுக்கு ஏற்றது.

பாங்க் ஆஃப் பரோடா பிரைம் கிரெடிட் கார்டு (Bank of Baroda Prime Credit Card)

பதிதாக கிரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கு இந்த கார்டு சரியான தேர்வாகும். மேலும், இந்த அட்டையைப் பயன்படுத்துபவர்கள் முதல் 60 நாட்களில் ரூ.10,000 செலவழித்தால் ரூ.500 போனஸ் வெகுமதி புள்ளிகளைப் பெற்றுத் தரும். மேலும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 2 வெகுமதி புள்ளிகளையும் வழங்குகிறார்கள். ரூ.2,500 ரூபாய்க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு 6 முதல் 48 மாதங்களுக்கு எளிதான இஎம்ஐகளாக மாற்றும் வசதியும் உள்ளது.

ஆக்சிஸ் வங்கி நியோ கிரெடிட் கார்டு (Axis Bank Neo Credit Card)

இந்த அட்டை வழங்கப்பட்ட முதல் வருடத்திற்கு கட்டணம் எதுவும் இருக்காது. ஆனால் இரண்டாம் ஆண்டு முதல்,  கட்டணமாக ரூ. 250 வசூலிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தள்ளுபடி கிடைக்கும். உணவு டெலிவரியில் 120 ரூபாய், பேடிஎம் மூலம் ரீசார்ஜ் மற்றும் டிடிஎச் கட்டணங்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில் 15 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும், அதிகபட்ச தள்ளுபடி ரூ. 2,500க்கு மேல் உள்ள பில்களுக்கு ரூ. 500 வழங்கப்படுகிறது.