Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குடும்பத்துடன் டூர் போறீங்களா? கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டா யூஸ் பண்ண 5 டிப்ஸ்

Credit Cards for Trips : குடும்பத்துடன் விடுமுறையில் சுற்றுலா செல்லும் போது கிரெடிட் கார்டுகள் மூலம் தள்ளுபடிகள், ரிவார்டு பாயிண்ட்கள், லவுஞ்ச் அனுமதி, பயணக் காப்பீடு உள்ளிட்ட பல நன்மைகளை பெறலாம். இந்த கட்டுரையில் கிரெடிட் கார்டுகள் மூலம் அதிக பலன்களை பெறும் 5 சிறந்த வழிகள் பகிரப்பட்டுள்ளன.

குடும்பத்துடன் டூர் போறீங்களா? கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டா யூஸ் பண்ண 5 டிப்ஸ்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 May 2025 20:53 PM IST

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கிரெடிட் கார்டுகள் அன்றாடத் தேவைகளையும் தாண்டி, பயணங்களுக்கும் ஷாப்பிங்கிற்கும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குடும்பத்துடன் விடுமுறை செல்லும் பொழுது, கிரெடிட்  கார்டுகள் டிக்கெட் புக்கிங், ஹோட்டல் புக்கிங், உணவக செலவுகள் உள்ளிட்ட பலவகையான இடங்களில் தள்ளுபடி மற்றும் ரிவார்டு பாயிண்ட் (reward points) மூலம் பல நன்மைகளை வழங்குகின்றன. மேலும் சுற்றுலா செல்கையில் ஏற்படும் தவிர்க்க முடியாத கூடுதல் செலவுகளின்போதும் நமக்கு பெரிதும் உதவுகின்றன. இந்த கட்டுரையில் கிரெடிட் கார்டுகள் மூலம் நீங்கள் எப்படி அதிக பலன்களை பெறலாம் என்பது பற்றிய ஐந்து முக்கியமான வழிகளைப் பார்க்கலாம்.

1.டிக்கெட் புக்கிங்கில் கிடைக்கும் சலுகைகள்

பல கிரெடிட் கார்டுகள் விமான நிறுவனங்கள் அல்லது பிரபலமான டிராவல் நிறுவனங்கள் இணைந்து சலுகைகளை வழங்குகின்றன. இவை வழியாக நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்யும் நேரத்திலேயே தள்ளுபடி பெறலாம். மேலும், இந்த கார்டுகளைப் பயன்படுத்துவோருக்கு கூடுதல்  செக் இன் செய்வதில் முன்னுரிமை,  டிக்கெட் விலை குறைப்பு போன்ற நன்மைகள் வழங்கப்படும்.

2. விமான நிலைய லவுஞ்ச் அனுமதி (Airport Lounge Access)

விமானம் தாமதமாகும் நேரத்தை சிரமமின்றி கழிக்க, பல கிரெடிட் கார்டுகள் விமான நிலைய லவுஞ்ச் அனுமதியை இலவசமாக வழங்குகின்றன. இது நீண்ட நேர இடைவேளைகளில் ஓய்வெடுக்க உதவுகிறது. உங்கள் பயணத்தை சிறப்பாக்க இந்த வசதியை தவறவிடக்கூடாது.

3. ஹோட்டல் மற்றும் உணவகங்களில் தள்ளுபடி

பயணத்தில் உணவுக்கும் தங்கும் வசதிக்கும் முக்கிய பங்கு உள்ளது. கிரெடிட் கார்டுகள் வழியாக ஹோட்டல்களில் தங்கும் போது இலவச காலை உணவு, முன்னுரிமை செக்-இன் போன்ற கூடுதல் நன்மைகள் கிடைக்கக்கூடும். மேலும் பிரபல உணவகங்களில் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் பெற முடியும்.

4. பயண காப்பீடு

சில கிரெடிட் கார்டுகள் பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களை (பேக் தொலைந்து போதல், மருத்துவ அவசர நிலை, விபத்து) எதிர்கொள்ள பயணக் காப்பீட்டையும் வழங்குகின்றன. இந்த நன்மைகள் பயணத்தில் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. உங்கள் கார்டில் இந்த வசதி இருந்தால், பயண செலவுகளுக்கு அதை பயன்படுத்துவது நல்லது.

5. சிறப்பு பயண கிரெடிட் கார்டுகள்

பயணங்களுக்கு என பிரத்யேக கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன. விடுமுறையில் முழுமையான நன்மைகளைப் பெற, ஒரு சிறப்பு பயண கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்கவும். இது வழியாக விமான டிக்கெட், ஹோட்டல், ஷாப்பிங் போன்றவற்றில் தனி தள்ளுபடிகள், ரிவார்டு பாயிண்ட்கள் மற்றும் சலுகைகள் பெறலாம்.

பயணத்தின் போது கிரெடிட் கார்டுகளை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் நிதி சுமைகளைக் குறைத்து, பல நன்மைகளைப் பெறலாம். ரிவார்டு பாயிண்ட், கேஷ்பேக், பயண பாதுகாப்பு மற்றும் சிறப்பு சலுகைகள் ஆகியவற்றை வழங்கி உங்களுக்கு மகிழ்ச்சியான பயண அனுபவத்தை அளிக்கும். எனினும், இந்த ரிவார்டுகளும் சலுகைகளும் காலவரையுடன் கூடியவை என்பதால், அவற்றைப் பயன்பாட்டில் கொண்டு வருவது அவசியம்.