ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கலாமா? என்ன பிரச்னை வரும்?
Insurance Policy : இன்சூரன்ஸ் பாலிசி குறித்த விதிமுறைகள் சிக்கலானவை. பாலிசி எடுக்கும்போது நாம் செய்யும் சிறு தவறு நம்மை பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்த நிலையில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசியை வைத்திருக்கலாமா? அப்படி வைத்திருப்பதால் என்ன பிரச்னை வரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமீபத்தில் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்த 38 வயதான ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இந்த நிலையில் அவர் பெயரில் எடுக்கப்பட்டிருந்த லைஃப் இன்சூரன்ஸிற்கு (Life Insurance) ஏற்ப காப்பீட்டு தொகை வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஒரு முக்கிய கம்பெனி, அவர் சமீபத்தில் வாங்கிய பாலிசிக்கு, ஏற்கனவே வைத்திருந்த காப்பீடுகளை தெரிவிக்கவில்லை எனக் கூறி, கிளெயிமை நிராகரித்துள்ளது. இது பெரும் சர்ச்சைையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட லைஃப் இன்சூரன்ஸ் வைத்திருக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்கள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த கட்டுரையில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட லைஃப் இன்சூரன்ஸ் வைத்திருக்கலாமா அப்படி வைத்திருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டப்படி பல பாலிசிகள் வைத்திருக்கலாமா?
ஆம். இந்தியாவில் ஒரே நபர் பல லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்திருக்கலாம். ஆனால், முக்கியமான நிபந்தனை ஒன்று இருக்கிறது. முன்பிருந்த அனைத்து பாலிசிகளும் புதிய பாலிசி எடுக்கும் போது ஒழுங்காக தெரிவிக்கப்பட வேண்டும். இது அட்மோஸ் குட் ஃபெயித் (Utmost Good Faith) என்ற விதியின் படி நமக்கு நன்மதிப்பை அளிக்கிறது. இதனால் நமக்கு பாலிசி மீதான கிளைமை அதிகப்படுத்தும்.
Human Life Value என்னும் கணக்கீடு முக்கியம்
ஒரு நபருக்கு ஒருங்கிணைக்கப்படும் மொத்த காப்பீடு தொகை, அவரது Human Life Value என்பதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இது அவரது வயது, ஆண்டு வருமானம், கடன்கள் மற்றும் ஏற்கனவே உள்ள இன்ஷூரன்ஸ் தொகைகளை வைத்து கணக்கிடப்படுகிறது. உதாரணமாக ஒருவரது ஹியூமன் லைஃப் வேல்யூ 2 கோடி என்றால் அவர் ஏற்கனவே ரூ.1.5 கோடிக்கான காப்பீடு வைத்திருந்தால், இரண்டாவது முறையாக பாலிசி எடுக்கும்போது ரூ. 50 லட்சம் மட்டுமே வழங்க முடியும்.
புதிய பாலிசி எடுக்கும் போது ஏற்கனவே உள்ள பாலிசிகளை தெரிவிக்காமல் விட்டால், அது முக்கிய தகவல் மறைத்தல் என கருதப்படும். இதில் மரணத்தின் காரணம் தொடர்புடையதாக இல்லையெனினும், கம்பெனிக்கு க்ளெயிம் நிராகரிக்கும் உரிமை உண்டு. குறிப்பாக அந்த பாலிசிகள் 3 ஆண்டுகளுக்கு இருந்தால் நிராகரிக்கப் பட அதிக வாய்ப்பிருக்கிறது.
இன்சூரன்ஸ் சட்டம் என்ன சொல்கிறது?
இன்சூரன்ஸ் சட்டம் பிரிவு 45ன் கீழ் ஒரு பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருந்தால், கம்பெனிகள் அதை நிராகரிக்க கடுமையான காரணங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் இருந்தால், கம்பெனி விசாரணை நடத்தி தவறான தகவல் இருந்தால் நிராகரிக்கலாம்.
கிளெயிம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்யலாம்?
-
நம் பக்கம் பிரச்னை இல்லையென்றால் கம்பெனியின் கஸ்டமர் கேர் பிரிவில் புகார் அளிக்கலாம்.
-
தவறான தகவல் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதல்ல என்பதை ஆதாரங்களுடன் விளக்கலாம்.
-
வருமான ஆதாரங்கள், ஹியூமன் லைஃப் வேல்யூ மற்றும் இன்ஷூரன்ஸ் ஆலோசகர் வழிகாட்டிய தவறுகளை வலியுறுத்தலாம்.
-
பின்னர், தேவையானால்இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் () புகார் அளிக்கலாம்.
லைஃப் இன்சூரன்ஸ் என்பது குடும்பத்தின் எதிர்கால நிதி பாதுகாப்புக்கு ஒரு பெரும் ஆதாரம். பல பாலிசிகளை வைத்திருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஒவ்வொரு பாலிசியும் எடுக்கும்போது, ஏற்கனவே எடுத்திருக்கும் பாலிசி குறித்த விவரங்கள், உடல்நிலை, பழக்கவழக்கங்கள் போன்றவை குறித்து முழுமையாக தெரிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில், மிகவும் தேவையான தருணத்தில் க்ளெயிம் நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது.