AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹுருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதல் இடத்தில் முகேஷ் அம்பானி!

Mukesh Ambani Secured India's First Billionaire Position | இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். இந்த நிலையில், இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற ஹூருன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முகேஷ் இடம் பிடித்துள்ளார்.

ஹுருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதல் இடத்தில் முகேஷ் அம்பானி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 09 Mar 2026 16:39 PM IST

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முக்கிய பணக்காரர்களில் ஒருவராக ரிலையன்ஸ் குழும (Reliance Group) தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் பிடித்து வரும் முகேஷ் அம்பானில் இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஹூருன் (Hurun) வெளிட்ட அறிக்கையில் இந்த பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் யார் அவர்கள் எந்த இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு – முகேஷ் அம்பானில் முதல் இடம்

ஹுருன் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2026 ஆம ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஹுருன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 2025 ஆம் ஆண்டு 9 சதவீதம் அதிகரித்து ரூ.9.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டுமன்றி ஆசியாவிலும் முதல் பணக்காரராக முகேஷ் அம்பானி மாறியுள்ளார்.

இதையும் படிங்க : மார்ச் மாதத்தில் FD வட்டி விகிதங்களை மாற்றி அமைத்த முக்கிய வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

உலக பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடத்தில் முகேஷ் அம்பானி

இந்தியாவில் முதல் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானி உலக அளவில் 17வது இடத்தில் உள்ளார். ரூ.7.5 லட்சம் கோடி நிகர சொத்து மதிப்பு உள்ள கவும் அதானி குடும்பம் ரூ.3.2 லட்சம் கோடி சொத்து மதிப்பு உள்ள எச்.சி.எல் டெக் தலைவர் ரோஷ்னி நாடார் குடும்பம் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளன. இந்தியாவின் முதல் 10 பில்லியனர்களில் ரோஷ்னி நாடார் மட்டுமே பெண்ணாக உள்ளார்.

இதையும் படிங்க  : தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவதற்கு முன்பு இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்!

சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் சைரஸ் பூனவல்லா ரூ.3 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 4வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோல ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா சுமார் 2.5 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Follow Us