AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரான் போரால் தள்ளுபடி விலையில் தங்கத்தை விற்கும் துபாய்.. இந்தியாவுக்கு பாதிப்பா?

Dubai Selling Gold At Discount Price | உலக அளவில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் போர் காரணமாக துபாயில் தங்கம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஈரான் போரால் தள்ளுபடி விலையில் தங்கத்தை விற்கும் துபாய்.. இந்தியாவுக்கு பாதிப்பா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Mar 2026 16:03 PM IST

துபாப், மார்ச் 07 : அமெரிக்கா (America), இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் (Iran) இடையே நிலவி வரும் கடுமையான போர் காரணமாக துபாயில் (Dubai) தங்கம் அதிக தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துபாயில் தங்கம் விலை இத்தகைய தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுவது பொதுமக்களை குழப்பமடைய செய்துள்ளது. உலகின் தங்க நகரம் (Gold City) என அழைக்கப்படும் துபாயில் இத்தகைய சூழல் உருவாகியுள்ளது ஏன், அது இந்தியாவை எந்த வகையில் பாதிக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போர் காரணமாக தங்கம் கடும் பாதிப்பு

உலக அளவில் மிகவும் பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்கின்றன. அந்த வகையில், துபாயில் அதிகமான தங்கம் உள்ளது. உலக அளவில் தங்க நகரம் என்றே துபாய் அழைக்கப்படுகிறது. துபாய்க்கு அடுத்தபடியாக தங்க நுகர்வில் இந்தியா உள்ளது. ஆனால், இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கையில் துபாயில் தங்கம் விலை குறைவாக இருக்கும். காரணம் வரி, ஜிஎஸ்டி உள்ளிட்டவை அங்கு இந்தியாவை விட குறைவாக இருக்கும்.

இதையும் படிங்க : EPS Vs PPF Vs NPS .. மூன்றில் ஓய்வு காலத்திற்கான சிறந்த முதலீடு எது?

துபாயில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் தங்கம்

இவ்வாறு தங்க சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த துபாய் தற்போது கடும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. அதாவது ஈரான் போர் பதற்றம் காரணமாக பல உலக நாடுகள் தங்களின் வான்வெளியை மூடியுள்ளன. இதன் காரணமாக துபாயில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யப்படாமல் உள்ளது. ஏற்றுமதி குறைந்துள்ளதால் தங்கம் தேங்கும் நிலையில் உள்ளது.

இதையும் படிங்க : உங்களிடம் ரூ.2000 நோட்டுகள் இருக்கா? ஈஸியா மாத்தலாம் – ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு

இந்த நிலையில், தங்கம் தேங்குவதை தடுத்து விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக துபாயில் தள்ளுபடி விலையில் தற்போது தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு துபாயில் நிலவும் இந்த சூழல் இந்தியாவில் தங்கம் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அதாவது, இந்தியா பெரும்பாலும் துபாய் வழியாக தங்கத்தை இறக்குமதி செய்யும் நிலையில், அதில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக இந்திய சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து தங்கம் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Follow Us