AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPS Vs PPF Vs NPS .. மூன்றில் ஓய்வு காலத்திற்கான சிறந்த முதலீடு எது?

NPS Vs EPF Vs PPF | பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய என்பிஎஸ், இபிஎஃப் மற்றும் பிபிஎஃப் ஆகிய திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் ஓய்வு காலத்திற்கான சிறந்த திட்டம் எது, அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPS Vs PPF Vs NPS .. மூன்றில் ஓய்வு காலத்திற்கான சிறந்த முதலீடு எது?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Mar 2026 11:26 AM IST

இளமை காலத்தில் உழைத்து பணம் சம்பாதித்து தேவைகள் மற்றும் செலவுகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். ஆனால், முதுமை காலத்தில் அப்படி அல்ல. ஏராளமான நிதி சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். இந்த நிலையில் தான் எதிர்காலத்திற்காக சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்வது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. நாம் இப்போது செய்யும் முதலீடு எதிர்காலத்தில் நம்மை நிதி பாதுகாப்புடன் வைத்திருக்கும். இந்த நிலையில், பிபிஎஃப் (PPF – Public Provident Fund), இபிஎஃப் (EPF – Employee Provident Fund) மற்றும் என்பிஎஸ் (NPS – National Pension Scheme) இந்த மூன்று திட்டங்களில் ஓய்வுக்கான சிறந்த திட்டம் எது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திட்டங்களின் சாதக, பாதகங்கள் என்ன என்ன?

  • பிபிஎஃப் திட்டத்திற்கு வரி சலுகை உண்டு. அதாவது இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை, அதற்கான வட்டி மற்றும் முதிர்வு தொகை என எதற்குமே வரி பிடித்தம் செய்யப்படாது. ஆனால், இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
  • பிபிஎஃப் திட்டத்திலும் என்பிஎஸ் திட்டத்தை போலவே வரிச் சலுகை உள்ளது. ஆனால், அதில் கட்டாயம் வருடாந்திர ஓய்வூதிய திட்டத்தில் பங்களிக்க வேண்டும் என்று உள்ள விதி பலருக்கும் பிடிப்பதில்லை.
  • இபிஎஃப் கணக்கு மூலம் மேற்கொள்ளப்படும் சேமிப்பு பாதுகாப்பானதாக இருந்தாலும் அதில் சிக்கல் உள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் நிரந்தர வருமானம் கிடைத்தாலும் பண வீக்கத்தை தாண்டி வருமானம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதையும் படிங்க : 2026-ல் இபிஎஃப்ஓ வட்டி விகிதம் 8.25% ஆகவே தொடரும்.. காரணம் இதுதான்!

இப்படி முதலீடு செய்தால் சிறந்ததாக இருக்கும்

ஓய்வு கால முதலீட்டில் நிலைத்தன்மை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தகைய சூழலில் இளம் வயதிலேயே முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.

  • நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்தால் இபிஎஃப் உடன் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
  • இதே சொந்த தொழில் செய்யும் நபராக இருந்தால் பிபிஎஃப் உடன் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
  • ஒருவேளை தாமதமாக முதலீட்டை தொடங்குகிறீர்கள் என்றால் இபிஎஃப் உடன் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இதையும் படிங்க : SIP-ல் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்க்கலாம்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

திட்டமிட்டு முதலீடு செய்யும் பட்சத்தில் சிறந்த லாபத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us