Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிரெடிட் கார்டை யூஸ் பண்ணாம வச்சிருக்கீங்களா? காத்திருக்கும் சிக்கல்!

Credit Score Usage Tip : கிரெடிட் கார்டை அடிக்கடி பயன்படுத்தாமல் விட்டால், அது செயலற்றதாக கருதப்பட்டு, வங்கிகள் அந்த கிரெடிட் கார்டு கணக்கை மூடக்கூடும். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். இந்த கட்டுரையில் அதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

கிரெடிட் கார்டை யூஸ் பண்ணாம வச்சிருக்கீங்களா? காத்திருக்கும் சிக்கல்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 05 Jul 2025 16:21 PM

இந்தியாவில் கிரெடிட் கார்டு (Credit Score) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான சம்பளதாரர்கள் கிரெடிட் கார்டை நம்பியே மாத செலவுகளை சமாளித்து வருகின்றனர். இந்த நிலையில்  2024-25 நிதியாண்டில் மட்டும், கிரெடிட் கார்டு பயன்பாடு ரூ.21.16 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ரிவார்டுகள், ஆஃபர்கள், கேஷ்பேக் வாய்ப்புகள், தள்ளுபடிகள் என பல காரணங்களால் மக்கள் அதிகமாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை அடிக்கடி பயன்படுத்தாமல் இருந்தால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் ஏற்படும் பாதிப்புகள்

ஒருவர் கிரெடிட் கார்டு வாங்கி அதனை  பயன்படுத்தாமல் இருந்தால் வங்கிகள் அந்த கார்டை செயிலிழக்க செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால் உங்கள் credit utilisation ratio எனப்படும் கடன் பயன்பாட்டுத் தொடர்பான விகிதம் மாற்றமடைந்து, உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்பு உண்டு.

அதே போல பயன்படுத்தாத பழைய கிரெடிட் கார்டுகள் செயலிழக்க செய்யப்பட்டால், உங்கள் நிதி வரலாற்றின் சராசரி காலம் குறையும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும் முக்கிய காரணமாக அமையும்.

நம் கிரெடிட் ஸ்கோர் என்பது, ஒரு கடனை நாம் எப்படி திருப்பி செலுத்தியிருக்கிறோம் என்பதைப் பொறுத்து அமையும். எனவே நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தவில்லை என்றால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

ஒவ்வொரு சில மாதங்களுக்கும் ஒரு முறை, குறைந்த அளவிலான தொகையை உங்கள் கிரெடிட் கார்டில் ஸ்வைப்  செய்யுங்கள். அந்த தொகைக்கு உடனே பில்களை செலுத்துவதன் மூலம் சரியான நேரத்தில் கடன் செலுத்தியவர் என்ற பெயர் கிடைக்கும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஓடிடி சப்ஸ்கிரிப்சன், மொபைல் ரீசார்ஜ் போன்ற சிறிய கட்டணங்களுக்கு உங்கள் கிரெடிட் கார்டில் ஆட்டோ பேமெண்ட் மூலம் பணம் செலுத்துங்கள். இது உங்கள் கார்டு தொடர்ச்சியாக பயன்பாட்டில் இருப்பதாக காட்டும்.

நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டில் ஏதேனும் பில் தொகை செலுத்த வேண்டியிருக்கிறதா, வருடாந்திர கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமா என்பதை நன்றாக தெரிந்து கொண்டு அனதை குளோஸ் செய்யலாம். அதே போல ஒரு கார்டுக்கு கட்டணம் இல்லை என்றால் அதனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். இது உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியை நீட்டிக்க உதவும்.

நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டைப் பெரிதாகப் பயன்படுத்தவில்லை என்றாலும், அதை முறையாக செயலில் வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லையெனில், உங்கள் நிதி நம்பிக்கையை மதிப்பீடு செய்யும் credit score மெதுவாகக் குறைவடையும் அபாயம் உண்டு.
அதனால், ஒவ்வொரு கார்டையும் தவறாமல் பராமரிக்கவும், சீராக செலுத்தவும் மறவாதீர்கள்!