லோனை முன்கூட்டியே அடைத்தால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா? உண்மை என்ன?
Credit Score Impact : கடனை முன் கூட்டியே அடைப்பதால், கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா என்ற சநதேகம் பலருக்கும் இருக்கும். கடன் கணக்கை முன் கூட்டியே மூடும்போது மொத்த கடன் வரம்பு குறையும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

முன்பெல்லாம் கடன் வாங்குவது அவமானகரமானதாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய மாறி வரும் பொருளாதார சூழ்நிலையில் கடன் வாங்குவது என்பது இயல்பானதாக மாறிவிட்டது. குறைந்தபட்சம் அனைவரும் கிரெடிட் கார்டாவது (Credit Card) பயன்படுத்துகிறோம். கடன் வாங்குவதை விட அதற்கு மாதத் தவணை செலுத்துவது தான் மிகவும் முக்கியம். குறிப்பாக பெர்சனல் லோன் (Personal Loan) போன்ற கடன்களுக்கு கூடுதல் வட்டி விதிக்கின்றன. இதனை தவிர்க்க பலரும் கடன்களை முன்கூட்டியே அடைக்கும் (Loan Foreclosure) முறையை தேர்வு செய்கிறார்கள். ஆனால் இந்த திடீர் விளைவு, உங்கள் கிரெடிட் ஸ்கோரில் (Credit Score) மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பலருக்கும் புரிதல் இல்லை. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பாரக்கலாம்.
ஒரு கடனின் முழுத் தொகையையும் அதன் காலாவதி நேரத்துக்கு முன் அடைப்பதையே கடனை முன் கூட்டியே அடைக்கும் முறை அதாவது Loan Foreclosure என்கிறார்கள். இது பெரும்பாலும் ஹோம் லோன், வாகன கடன், பெர்சனல் லோன் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகிறது. வட்டிச்செலவை குறைப்பதற்கும், கடனிலிருந்து விரைவாக விடுபடுவதற்கும் இது சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.
கடனை முன் கூட்டியே அடைப்பதால் கிரெடிட் ஸ்கோரில் ஏற்படும் விளைவுகள்
உங்களது கிரெடிட் ஸ்டேட்மென்ட்டில் Closed எனப் பதிவாகும். இது நேர்மையான விஷயமாக கருதப்படுகிறது. இந்த முறையில் Settled என்ற நெகட்டிவாக பதிவு செய்யப்படாது. இது பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் கிரெடிட் ஸ்கோரில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக சிறிய அளவில் கிரெடிட் ஸ்கோர் குறையலாம்.




இதையும் படிக்க : தனிநபர் கடனை சுலபமாக அடைக்கலாம்.. இவற்றை ஃபாலோ பண்ணுங்க!
கடனை முன் கூட்டியே அடைத்த பிறகு, 30 முதல் 60 நாட்களுக்குள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அந்த தகவலை கிரெடிட் அமைப்புகளுக்கு அனுப்பும். இதனையடுத்து உங்கள் கிரெடிட் ஸ்கோர் 1 அல்லது 3 மாதங்களுக்குள் முழுமையாக புதுப்பிக்கப்படும்.
ஏன் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையக்கூடும்?
மேலும் ஊங்கள் கிரெடிட் ஸ்டேட்மென்டில் இருந்த பணப்பரிவர்த்தனை இனி இருக்காது என்பதால் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் சில புள்ளிகள் குறையும். நீண்ட காலம் பராமரித்த கணக்கு மூடப்பட்டால் ஆவரேஜ் கிரெடிட் ஏஜ் குறையும். கடன் கணக்கை மூடும்போது, உங்களுக்குக் கிடைக்கும் மொத்த கடன் வரம்பு குறையும். இதனால் உங்கள் உபயோகத் தொடர்பு விகிதம் அதிகரிக்கும், ஏனெனில் மொத்த கடன் வரம்புடன் ஒப்பிடும்போது, நீங்கள் பயன்படுத்தும் கடன் அளவு அதிகமாகத் தோன்றும். இந்த மாற்றம் உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம்.
இதையும் படிக்க: கிரெடிட் கார்டை யூஸ் பண்ணாம வச்சிருக்கீங்களா? காத்திருக்கும் சிக்கல்!
ஆனால் இது தற்காலிகமானது மட்டுமே. நல்ல கடன் பழக்கவழக்கங்கள் இருந்தால், பிறகு உங்கள் ஸ்கோர் மீண்டும் உயரும்.
முன் கூட்டியே கடனை அடைப்பதால் ஏற்படும் நன்மைகள்
வட்டி செலவுகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். இதனால் உங்கள் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் கடன் பராமரிப்பு வரலாறு நல்ல விதமாக இருக்கும். இதனால் எதிர்கலா கடன்கள் பெருவதில் எந்த சிக்கலும் இருக்காது.