Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேங்க் ஸ்டேட்மென்ட் இல்லாமலே பெர்சனல் லோன் வாங்க முடியுமா? அதற்கான தகுதிகள் என்ன?

Loan Without Bank Statement : பெர்சனல் லோன் பெற வேண்டும் என்றால் அதற்கு நாம் சமர்பிக்க வேண்டி முக்கிய ஆவணம் பேங்க் ஸ்டேட்டமென்ட். இதன் மூலம் நமது வருமானம், செலவு செய்யும் முறை ஆகியவற்றை ஆராய்ந்து வங்கிகள் நமக்கு பெர்சனல் லோன் வழங்குவது குறித்து முடிவெடுக்கும்.

பேங்க் ஸ்டேட்மென்ட் இல்லாமலே பெர்சனல் லோன் வாங்க முடியுமா? அதற்கான தகுதிகள் என்ன?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 07 Jul 2025 16:59 PM

அவசர காலங்களில் நிதி தேவைப்படும் போது பெர்சனல் லோன்கள் (Personal Loan) பெரும்பாலானவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகின்றன. ஆனால் பெரும்பாலான லோன் விண்ணப்பங்களில் வங்கி ஸ்டேட்மென்ட் (bank statement) ஒரு முக்கிய ஆவணமாகவே கருதப்படுகிறது. நம்முடைய வருமான நிலை மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை பரிசோதிக்கும் விதமாக பேங்க் ஸ்டேட்மென்ட் கேட்கப்படுகிறது. மாத சம்பளதாரர்களுக்கு அவர்களது சம்பளம், அவர்கள் செலவு செய்யும் தொகை ஆகியவற்றை வைத்து அவர்களது கடன் பெறும் தகுதியை முடிவு செய்வார்கள். ஆனால் ஒரு ஃப்ரீலான்சராக பணியாற்றினால் அல்லது சுய தொழில் செய்பவராக இருந்தால் அவர்களது வருமானம் நிலையாக இருக்காது. இதனால் பேங்க் ஸ்டேட்மென்ட் சமர்பிப்பது சிக்கலாக இருக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கு பேங்க் ஸ்டேட்மென்ட் இல்லாமலும் லோன் பெறலாம்.

வங்கி ஸ்டேட்மென்ட் இல்லாமல் லோன் பெற முடியுமா?

வங்கி ஸ்டேட்மென்ட் இல்லாமலேயும் லோன் பெறலாம். ஆனால், அதற்காக கீழ்காணும் ஆவணங்களை வங்கியிலும் நிதி நிறுவனங்களிலும் சமர்பிக்க வேண்டியிருக்கும்.

சேலரி ஸ்லிப்

நீங்கள் மாத சம்பளம் பெறும் நபராக இருந்தால் வங்கி ஸ்டேட் மென்ட் இல்லாமல் சேலரி ஸ்லிப் மூலம் லோன் பெறலாம். இதற்காக 3 மாத சேலரி ஸ்லிப்பை வங்கியில் சமர்பிக்க வேண்டியிருக்கும்.

வருமான வரி அறிக்கைகள் (ITR)

சுயதொழில் செய்பவர்கள் அல்லது வங்கி ஸ்டேட்மென்ட் இல்லாதவர்கள், கடந்த 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வருமான வரி பதிவுகளை வழங்கலாம். இது உங்கள் நிதி நிலையை உறுதிப்படுத்தும் ஆவணமாக அமையும்.

 கிரெடிட் ஸ்கோர்

நீங்கள் ஏற்கனவே லோன் வாங்கியிருந்தால், அதற்காக கடனை முறையாக செலுத்திய விவரங்களை அடிப்படையாகக் கொண்ட சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் அது உங்கள் கடன் பெறும் வாய்ப்பை மேம்படுத்தும். குறிப்பாக உங்களது கிரெடிட் ஸ்கோர் 700க்கு மேல் இருந்தால் உங்களுக்கு கடன் விரைவில் கிடைக்கும்.

சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுதல்

பெர்சனல் லோன்கள் பொதுவாக இதுபோன்ற நிதி பாதுகாப்பை கோருவதில்லை. இருப்பினும் உங்களிடம் உள்ள தங்க நகை, நிலம், வீடு ஆகியவற்றை வைக்கும்போது கடன் எளிதில் கிடைக்கும்.

ஃபார்ம் 16 (Form 16)

இது உங்கள் நிறுவனத்தால் வழங்கப்படும் வரி தொடர்பான சான்றிதழ். இது உங்கள் ஆண்டு வருமானத்தை நிரூபிக்க உதவுகிறது. இதனை சமர்பித்தும் பெர்சனல் லோன் வாங்கலாம். ஆனால் அது உங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை பொறுத்தது.

லோன் பெறும் தகுதிகள்

  • பேங்க் ஸ்டேட்மென்ட் இல்லாமல் லோன் பெற உங்கள் வயது 21 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும்.
  • உங்கள் வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்க வேண்டும். இது நீங்கள் வசிக்கும் பகுதி மற்றும் வங்கியைப் பொறுத்து மாறுபடும்.
  • கிரெடிட் ஸ்கோர் 700க்கு மேல் இருப்பது சிறப்பு.
  • மாதம் சம்பளம் வாங்குபவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • சுய தொழில் செய்பவர்கள் 1 முதல் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.