AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹோம் லோன் வாங்க சிறந்தது எது? அரசு வங்கியா? தனியார் வங்கியா?

Latest Home Loan Rates : இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் குறைத்துள்ளது. எனவே ஹோம் லோன் பெற இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சரியான வங்கிகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். இந்த கட்டுரையில் ஹோம் லோன் பெற சிறந்தது அரசு வங்கியா? அல்லது தனியார் வங்கியா? என பார்க்கலாம்.

ஹோம் லோன் வாங்க சிறந்தது எது? அரசு வங்கியா? தனியார் வங்கியா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Jun 2025 18:12 PM IST

வீடு என்பது நடுத்தர வர்க்கத்தினரின் நீண்ட நாள் கனவு. அதற்கு ஹோம் லோன் (Home Loan) ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது. சரியான வங்கிகளைத் தேர்ந்தெடுத்து ஹோம் லோன் பெறுவது மிகவும் அவசியம். இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India)  ஜூன், 2025ன் போது தனது ரெப்போ விகிதத்தை 50 பாயிண்ட் (bps) குறைத்துள்ளது. இது இந்த ஆண்டில் மூன்றாவது முறை வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது. இதனையடுத்து மொத்தமாக 100 பாயிண்ட் அளவுக்கு குறைத்துள்ளது. இதன் மூலம் வீட்டு கடன்களின் வட்டி விகிதம் குறையும். மேலும் மாதத் தவணை அல்லது கடன் செலுத்தும் கால அளவு குறையும். தி எகனாமிக்ஸ் டைம்ஸில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் வீட்டுக் கடன் வாங்க சிறந்தது அரசு வங்கியா, தனியார் வங்கியா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீட்டு கடன் வட்டி விகிதம் எப்படி மாறும்?

ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் RBI-யிடம் கடன் பெறும் விகிதம். இது குறையும்போது வங்கிகள் வழங்கும் கடன்களுக்கும் வட்டி குறைய வாய்ப்பு அதிகம். ரெப்போ விகிதத்துடன் தொடர்புடைய வீட்டு கடன்களைக் கொண்டுள்ளவர்களுக்கு, வரும் மாதங்களில் வட்டி செலவு குறைவதாக தெரியும். ஏற்கனவே பல வங்கிகள் தங்களுடைய ரெப்போ-சம்பந்தப்பட்ட வட்டி விகிதங்களை மறுஆய்வு செய்து குறைத்துள்ளன.

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் தற்போதைய வீட்டு கடன் வட்டி விகிதங்கள்

அரசு வங்கிகள்

வங்கி ரூ.30 லட்சம் வரை ரூ.30-ரூ.75 லட்சம் ரூ.75 லட்சம் மேல்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 8.00%-9.20% 8.00%-9.20% 8.00%-9.20%
பஞ்சாப் நேஷனல் பேங்க் 7.55%-9.35% 7.50%-9.25% 7.50%-9.25%
பேங்க் ஆப் பரோடா 8.00%-9.90% 8.00%-9.65% 8.00%-9.90%
யூனியன் பேங்க் 7.85%-10.25% 7.85%-10.40% 7.85%-10.40%
பேங்க் ஆஃப் இந்தியா 7.85%-10.60% 7.85%-10.35% 7.85%-10.60%
கனரா பேங்க் 8.00%-10.75% 7.95%-10.75% 7.90%-10.65%
இந்தியன் பேங்க் 7.40%-9.40% 7.40%-9.40% 7.40%-9.40%
யுசிஓ பேங்க் 7.40%-9.00% 7.40%-9.00% 7.40%-9.00%
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 7.90%-8.90% 7.90%-8.90% 7.90%-8.90%
பேங்க் ஆப் பரோடா 7.35%-10.15% 7.35%-10.15% 7.35%-10.15%

தனியார் வங்கிகள்

வங்கி ரூ.30 லட்சம் வரை ரூ.30-ரூ.75 லட்சம் ரூ.75 லட்சம் மேல்
ஐசிஐசி பேங்க் 8.50% முதல் 8.50% முதல் 8.50% முதல்
ஆக்சிஸ் பேங்க் 8.75%-12.80% 8.75%-12.80% 8.75%-9.65%
எச்டிஎஃப்சி பேங்க் 8.45% முதல் 8.45% முதல் 8.45% முதல்
எச்பிசி(HSBC) 8.25% முதல் 8.25% முதல் 8.25% முதல்
கோடாக் பேங்க் 8.65% முதல் 8.65% முதல் 8.65% முதல்
பந்தன் பேங்க் 8.66%-15.00% 8.66%-12.83% 8.66%-12.83%
சவுத் இந்தியன் பேங்க் 8.30%-10.60% 8.30%-10.60% 8.30%-10.60%
கரூர் வைஸ்யா பேங்க் 8.45%-11.40% 8.45%-11.40% 8.45%-11.40%
ஆர்பிஎல் பேங்க் 9.00% முதல் 9.00% முதல் 9.00% முதல்
சிஎஸ்பி பேங்க் 9.61%-11.34% 9.61%-11.34% 9.61%-11.34%

எது சிறந்தது?

ரெப்போ விகிதம் குறைந்துள்ளதால், ஹோம் லோன் பெற இது சிறந்த நேரம். குறைந்த வட்டி விகிதம் பெற, உங்கள் வசதிக்கேற்ப வங்கிகளை ஒப்பிட்டு சரியான முடிவெடுக்கவும்.

  • அரசு வங்கிகளைப் பொறுத்தவரை குறைந்த வட்டி விகிதம் மற்றும் குறைந்த செயலாக்க கட்டணங்கள் அதன் நன்மைகளாக பார்க்கப்படுகின்றன. ஆனால் கடன் வழங்க அரசு வங்கிகள் நீண்ட காலம் எடுத்துக்கொள்கின்றன.
  • அதே நேரம் தனியார் வங்கிகள் கடனுக்கு விரைவாக ஓப்புதல் அளிக்கின்றன. கடன் பெறுவதற்கான வங்கி நடைமுறைகளும் எளிதாக நடைபெறும். ஆனால் அதன் வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் அதிகமாக இருக்கலாம்.

இது மட்டுமல்லாமல் சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் சிறந்த வட்டி கிடைக்கும். மேலும் ஒவ்வொரு வங்கியிலும் சேவைக் கட்டம், திருப்பி செலுத்த தாமதிக்கும் போது விதிக்கப்படும் அபராதம், வாடிக்கையாளர் சேவை ஆகியவை மாறுபடுகின்றன. எனவே வட்டி விகிதம் மட்டுமல்லாமல் வங்கியின் இந்த பிற அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Follow Us