Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீட்டு லோன் இஎம்ஐ இருக்கா? ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ.. வெளியான அறிவிப்பு

RBI Cuts Repo Rate : வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதன் மூலம் வாகனம், தனிநபர், வீட்டு கடன்களுக்கான தவணை குறைய வாய்ப்புள்ளது. தற்போது வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வீட்டு லோன் இஎம்ஐ இருக்கா? ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ.. வெளியான அறிவிப்பு
ரிசர்வ் வங்கிImage Source: TV9
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 Jun 2025 10:53 AM

வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை ரிசர்வ் வங்கி (Reserve bank of india) குறைத்துள்ளது. இதன் மூலம் வாகனம், தனிநபர், வீட்டு கடன்களுக்கான தவணை குறைய வாய்ப்புள்ளது. 0.5  சதவீதம் குறைத்து, தற்போது 5.50 சதவீதமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் 2025 ஜூன் 4ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த நிலையில், 2025 ஜூன் 6ஆம் தேதியான இன்று நாணயக் கொள்கை கூட்டத்தின் கடைசி நாளாகும். இந்த கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பை வெளியிட்டார்.

ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ

அதன்படி,  ரெப்போ வட்டி விகிதத்தை  0.5 சதவீதம்  ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.  இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உள்ளதாக. 6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது  50 புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.50 சதவீதமாக உள்ளது.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ விகிதத்தைக் குறைத்து வருகிறது. முன்னதாக, பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ரெப்போ வட்டி விகிதமும் 0.25-0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.50 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  2025 ஜூன் மாதமும்  ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, “நாட்டின் பணவீக்கம் அளவு 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் சிறந்த நிலையில் உள்ளது.

வட்டி குறையப்போகுது

பணவீக்கத்திற்கு ஏற்ப 2025-26ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் காலாண்டு 6.5 சதவீதமும், இரண்டாம் காலாண்டு 6.7 சதவீதமும், மூன்றாம் காலாண்டு 6.6 சதவீதமூம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், ”ரெப்போ விகிதத்தைக் குறைப்பது பணப்புழகத்தை அதிகரிக்கும். உள்நாட்டு வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் உதவும்.

உலகளாவிய நிலைமை தொடர்ந்து நிலையற்றதாக இருக்கும்போது, ​​உள்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். நாட்டின் விலை ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு உள்நாட்டு வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் தற்போதைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். எனவே, ரெப்போ வட்டி குறைவை அடுத்து, வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 14 தான் கடைசி தேதி - அதற்குள் ஆதாரில் இத பண்ணிடுங்க!
ஜூன் 14 தான் கடைசி தேதி - அதற்குள் ஆதாரில் இத பண்ணிடுங்க!...
தன்னை காப்பாற்றிய ஜேசிபிக்கு நன்றி தெரிவித்த யானை - வைரல் வீடியோ
தன்னை காப்பாற்றிய ஜேசிபிக்கு நன்றி தெரிவித்த யானை - வைரல் வீடியோ...
நண்பனின் கேரக்டரை காப்பியடித்த சந்தானம்.. என்ன படம் தெரியுமா?
நண்பனின் கேரக்டரை காப்பியடித்த சந்தானம்.. என்ன படம் தெரியுமா?...
 நாளை வெளியாகிறது அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் புதிய அப்டேட்
 நாளை வெளியாகிறது அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் புதிய அப்டேட்...
ரயிலில் கிடைக்காமல் போன உதவி.. கிரிக்கெட் வீரர் மரணம்
ரயிலில் கிடைக்காமல் போன உதவி.. கிரிக்கெட் வீரர் மரணம்...
தக் லைஃப் படத்தைப் வெகுவாகப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்...
தக் லைஃப் படத்தைப் வெகுவாகப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்......
தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode!
தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode!...
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!...
நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?
நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?...
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்...
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!...