Repo Rate : மீண்டும் குறையும் ரெப்போ ரேட்?.. வட்டி குறைக்கப்படுவதால் யாருக்கு லாபம்?.. யாருக்கு நஷ்டம்?
Repo Rate Cut Impact | கடந்த ஐந்து ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் குறையாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. இந்த நிலையில், ஆர்பிஐ மீண்டும் ரெப்போ வட்டியை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்று முறை ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Interest Rate) குறைத்துள்ளது. 2025 ஜனவரி மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாக ஆக இருந்தது. இந்த நிலையில், தற்போது வெறும் 5.50 சதவீதமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமலே இருந்த நிலையில், சமீப காலமாக தொடர் சரிவை சந்தித்து வருவதால் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், தொடர் ரெப்போ வட்டி குறைப்பு குறித்து சிலர் கவலையும் அடைந்துள்ளனர். இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு சில மாதங்களிலேயே 6.50 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைந்த ரெப்போ வட்டி விகிதம்
ரெப்போ வட்டி விகிதம் 2021 ஆம் ஆண்டு முதல் எந்த வித மாற்றமும் இன்றி 6.50 சதவீதமாகவே நீடித்து வந்தது. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக 2025 ஜனவரி மாதம் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேலும் இரண்டு முறை இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக 6.50 ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது வெறும் 5.50 சதவீதமாக உள்ளது. அதாவது வெறும் 6 மாதத்தில் மட்டும் 1 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : FD Scheme : ரெப்போ வட்டியை குறைத்த RBI.. இருப்பினும் FD-க்கு 9.10 வரை வட்டி வழங்கும் வங்கிகள்!




ரெப்போ வட்டி குறைவு – யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது ஒரு சிறந்த அம்சமாக கருதப்படுகிறது. குறிப்பாக வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு இது ஒரு வர பிரசாதமாக உள்ளது. இது சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சிலருக்கு கவலை ஏற்படுத்தும்.
யாருக்கு லாபம்?
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது வங்கிகளில் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு சிறப்பானதாக அமையும். காரணம், வங்கிகள் ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படையில் கடன் வட்டியை நிர்ணயம் செய்யும். இந்த நிலையில், ரெப்போ வட்டி குறைந்தால் கடன் வட்டி தொகையும் குறையும்.
யாருக்கு நஷ்டம்?
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்த நபர்களுக்கு பாதகமாக மாறும். காரணம், ரெப்போ வட்டியின் அடிப்படையில் இந்த திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக எதிர்பார்த்த லாபத்தை பெற முடியாமல் போகலாம்.