Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

FD Schemes : ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி.. FD வட்டியை குறைத்த எஸ்பிஐ!

SBI Reduces FD Interest Rate of Special FD Scheme | இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததன் எதிரொலியாக பல வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களின் வட்டியை குறைத்து வருகின்றன. அந்த அவகையில் எஸ்பிஐ வங்கி தனது நிலையான வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டியை குறைத்துள்ளது.

FD Schemes : ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி.. FD வட்டியை குறைத்த எஸ்பிஐ!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 16 Jun 2025 00:37 AM

இந்தியாவின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை கையாண்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) அது குறித்து அவ்வப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிடும். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Interest Rate) குறைத்து அறிவித்தது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக சில வங்கிகள் தங்களின் கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில், எஸ்பிஐ வங்கி தனது நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

6 மாதங்களில் 3 முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக குறைத்து வருகிறது. குறிப்பாக 2025, ஜனவரி மாதம் 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை, 6.25 சதவீதமாக குறைத்தது. அதனை தொடர்ந்து 2025, மார்ச் மாதம் ரெப்பொ வட்டியை 6 சதவீதமாக குறைத்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ஜூன் 07, 2025 அன்று ரெப்போ வட்டி விகிதத்தை வெறும் 5.50 சதவீதமாக குறைத்துள்ளது.

மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ஆர்பிஐ

எஃப்டி வட்டி விகிதத்தை குறைத்த எஸ்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததன் எதிரொலியாக சில வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டியை குறைத்தன. குறிப்பாக கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கனவரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியை குறைத்தன அந்த வகையில், தற்போது எஸ்பிஐ வங்கி தனது வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

எஸ்பிஐ வங்கி தனது சிறப்பு திட்டமான அம்ரித் விருஷ்டி (Amrit Vrishti) திட்டத்தின் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. 444 நாட்கள் கால அளவீடு கொண்ட இந்த திட்டத்தின் வட்டியில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 6.85 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெட் அலர்ட் அறிவிப்பு: ஊட்டியில் குறைந்த சுற்றுலா பயணிகளின் வருகை
ரெட் அலர்ட் அறிவிப்பு: ஊட்டியில் குறைந்த சுற்றுலா பயணிகளின் வருகை...
பிடித்த காட்சி.. நீக்க வேண்டாமென சொன்ன ரஜினிகாந்த்!
பிடித்த காட்சி.. நீக்க வேண்டாமென சொன்ன ரஜினிகாந்த்!...
இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்!
இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்!...
புனே பாலம் விபத்தில் 4 பேர் பலியான நிலையில், 51 பேருக்கு சிகிச்சை
புனே பாலம் விபத்தில் 4 பேர் பலியான நிலையில், 51 பேருக்கு சிகிச்சை...
தமிழக அரசு: பெண் காவலர்களுக்கு விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல்..!
தமிழக அரசு: பெண் காவலர்களுக்கு விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல்..!...
தொடர் மழை எதிரொலி.. நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..
தொடர் மழை எதிரொலி.. நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.....
உடல்நலக்குறைவால் சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..
உடல்நலக்குறைவால் சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.....
கன்னியாகுமரி: ஆர்ப்பரிக்கும் கடல் அலை... தடுப்புகள் அமைத்து காவல்
கன்னியாகுமரி: ஆர்ப்பரிக்கும் கடல் அலை... தடுப்புகள் அமைத்து காவல்...
3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி!
3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி!...
கிருஷ்ணகிரியில் தெருக்கூத்து கலைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை..!
கிருஷ்ணகிரியில் தெருக்கூத்து கலைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை..!...
பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்க மறுத்த நடிகை தேவயானி!
பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்க மறுத்த நடிகை தேவயானி!...