Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Fixed Deposit : இனி இது முடியாது.. நிலையான வைப்பு நிதி விதிகளில் வந்த முக்கிய மாற்றம்.. ஆர்பிஐ அதிரடி!

Reserve Bank of India New FD Rules | இந்திய ரிசர் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு முதலீட்டு திட்டம் தான் நிலையான வைப்பு நிதி திட்டம். இது வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் நிலையில், இதன் விதிகளில் முக்கிய மாற்றம் செய்து ஆர்பிஐ அறிவித்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Fixed Deposit : இனி இது முடியாது.. நிலையான வைப்பு நிதி விதிகளில் வந்த முக்கிய மாற்றம்.. ஆர்பிஐ அதிரடி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Jun 2025 12:19 PM IST

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI – Reserve Bank of India) கீழ் இயங்கும் நிலையில், வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் நிலையான வைப்பு நிதி திட்டங்களும் (FD – Fixed Deposit Schemes) ஆர்பிஐ-ன் கீழ் தான் வரும். இதன் காரணமாக நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான விதிகளை ஆர்பிஐ அவ்வப்போது மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான விதிகளில் முக்கிய மாற்றம் செய்துள்ளது. இந்த நிலையில், எஃப்டி திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள முக்கிய மாற்றம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய வங்கிகளில் பரவலாக செயல்படுத்தப்படும் நிலையான வைப்பு நிதி திட்டம்

இந்தியாவில் அதிக மக்களால் முதலீடு செய்யப்படும் பிரதான திட்டங்களில் ஒன்றாக உள்ளது தான் நிலையான வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான வருமானத்தை பெறலாம் என்பதால் பலரும் இதனை முதலீடு செய்ய தேர்வு செய்கின்றனர். அதுமட்டுமின்றி நிலையான பைப்பு நிதி திட்டம் நிதி இழப்பை ஏற்படுத்தாத பாதுகாப்பான திட்டமாக கருதப்படுவதால் இது மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய சில விதிகள் உள்ள நிலையில், அதில் இந்திய ரிசர்வ் வங்கி சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

நிலையான வைப்பு நிதி திட்டம் – விதிகளில் வந்த முக்கிய மாற்றங்கள்

பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தியின் படி, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகளில் கூறியுள்ளதாவது, வெளி நாடுகளுக்கு பணம் அனுப்பி அங்குள்ள நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது, அதிக லாபம் மற்றும் வட்டி தரக்கூடிய நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது ஆகிய செயல்களை செய்யும் இந்தியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தையும் (LRS – Liberalised Remittance Scheme) மாற்ற ஆர்பிஐ தயாராகி வருகிறது. இதன் காரணமாக இனி எல்ஆர்எல் மூலம் அனுப்பப்படும் பணத்தை பயன்படுத்தி வெளி நாடுகளில் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.