Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

FD Scheme : ரெப்போ வட்டியை குறைத்த RBI.. இருப்பினும் FD-க்கு 9.10 வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

Best Fixed Deposits Despite Repo Rate Cuts | இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை மூன்றாவது முறையாக குறைத்தது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

FD Scheme : ரெப்போ வட்டியை குறைத்த RBI.. இருப்பினும் FD-க்கு 9.10 வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 09 Jun 2025 18:52 PM

நிலையான வைப்பு நிதி திட்டங்கள் (FD – Fixed Deposit Schemes) பாதுகாப்பானவையாக இருந்தாலும், அவற்றின் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் பட்சத்தில் அது குறைந்த லாபத்தை பெற வழிவகை செய்துவிடும். நிலையான வைப்பு நிதி திட்டம், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI – Reserve Bank of India) ரெப்போ வட்டி (Repo Rate) விகிதம் குறித்து மாறுபடும். ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தால் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியும் குறையும். இதுவே ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை  உயர்த்தினால், நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியும் அதிகரிக்கும். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டியை குறைத்து வரும் நிலையில், அது நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறைந்தாலும் அதிக வட்டி வழங்கப்படும் எஃப்டி திட்டங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன் மூலம் 6.50 ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.50 ஆக உள்ளது. இதன் காரணமாக பல வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியை குறைத்துள்ள நிலையில், சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான எஃப்டி திட்டங்களுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கி வருகின்றன.

ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ

மூத்த குடிமக்களுக்கான எஃப்டி திட்டம் – 8% வரை வட்டி வழங்கும் வங்கிகள்

  • ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (AU Small Finance Bank) தனது 18 மாத கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank) தனது 888 நாட்கள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8.55 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank) தனது 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 8.55 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (North East Small Finance Bank) தனது 18 மாத கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 9 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • யுனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank) தனது 1001 நாட்கள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 9.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தாலும் இந்த வங்கிகள், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?
2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?...
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்......
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...