Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Fixed Deposit : ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி.. FD திட்டங்களின் வட்டியை குறைத்த வங்கிகள்!

These Banks Reduced Fixed Deposit Interest Rates | கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், சில வங்கிகள் தங்களது நிலையான வைப்பி நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்தன. அந்த வகையில், ஆர்பிஐ மீண்டு ரெப்போ வட்டியை குறைத்துள்ள நிலையில், சில வங்கிகள் எஃப்டி வட்டி விகிதங்களை குறைத்துள்ளனர்.

Fixed Deposit : ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி.. FD திட்டங்களின் வட்டியை குறைத்த வங்கிகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Jun 2025 19:51 PM IST

இந்தியாவில் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய விரும்பும் பெரும்பாலான மக்களுக்கு முதன்மை தேர்வாக உள்ளது நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit Scheme) தான். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான லாபத்தை பெற முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் இதில் முதலீடு செய்கின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் இந்த நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை குறைத்துள்ள நிலையில், சில வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டங்களின் வட்டிகளை குறைத்துள்ளன.

நிலையான வைப்பு நிதி திட்ட வட்டி விகிதங்களை குறைத்த வங்கிகள்

இந்தியாவில் உள்ள வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு ஒவ்வொரு விதமாக வட்டி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ள நிலையில், சில வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.

ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ஆர்பிஐ

கனரா வங்கி

கனரா வங்கி தனது ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இதன் காரணமாக 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டி 6.75 சதவீதமாக உள்ளது. இதேபோல 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான திட்டங்களின் வட்டி விகிதங்களில் 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இதன் காரணமாக அந்த திட்டங்களின் வட்டி விகிதங்கள் 6.75 சதவீதமாக உள்ளது.

பிஎன்பி வங்கி

பிஎன்பி வங்கி தனது ஒரு ஆண்டு முதல் 389 நாட்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இதன் காரணமாக வட்டி விகிதம் 7-ல் இருந்து 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. 391 நாட்கள் முதல் 507 நாட்கள் வரையிலான நிலையான வைப்பி நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை 6.8 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக்க குறைத்துள்ளது.