SIP : 18 வருடங்களில் ரூ.1.18 கோடியாக வளரக் கூடிய சிறிய முதலீடு! எப்படி முதலீடு செய்வது?
Systematic Investment Plan : சிப் எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் திட்டத்தில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் 18 ஆண்டுகளில் 1.18 கோடியை லாபமாக பெற முடியும். இது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சிறிய தொகைகளை தொடர்ச்சியான முறையில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் பெரிய தொகையாக சிப் (SIP – Systematic Investment Plan) முறை மூலம் மாற்ற முடியும். ஒரு மாதத்திற்கு ரூ.2,000 முதல் ஆரம்பித்து, வருடத்திற்கு சுமார் 15.5 சதவிகிதம் வருமான வீதத்தில் முதலீடு செய்தால், 18 ஆண்டுகளில் ரூ.1.18 கோடி வரை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. சிப் (SIP) என்பது ஒரு கட்டுப்பாடான முதலீட்டு முறை. இதில், ஒருவர் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் பண்டுகளில் (Mutual Funds) முதலீடு செய்கிறார் என்றால் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, நீண்ட காலத்தில் மிகப்பெரிய பலனை அவருக்கு தரும். வருடத்திற்கு ஒரு முறை சிறப்பான வட்டி விகிதம் கிடைக்கும் இந்த திட்டம் நமக்கு எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ரூ. 2000 முதல் ரூ.10,000 வரை முதலீடு செய்வதால் கிடைக்கும் பலன்
பிரபல நதி ஆலோசர் ஏ.கே.மந்தன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். அதில்,




- ஒருவர் மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் மொத்தமாக 18 ஆண்டுகளில் ரூ.19.2 லட்சம் வருமானத்தையும் சேர்த்து 23.5 லட்சம் கிடைக்கும்.
- அதே போல ரூ.4,000 முதலீடு செய்தால் 18 ஆண்டுகளில் 38.4 லட்சம் வருமானத்துடன் சேர்த்து ரூ. 47 லட்சம் லாபம் கிடைக்கும்.
- மாதம் ரூ. 6,000 முதலீடு செய்தால் ரூ.57.6 லட்சம் லாபத்துடன் சேர்த்து மொத்தமாக ரூ70.5 லட்சம் கிடைக்கும்.
- மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால் ரூ.76.8 லட்சம் லாபத்துடன் சேர்த்து மொத்தமாக ரூ.94.1 லட்சம் கிடைக்கும்.
- மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் ரூ.96 லட்சம் லாபத்துடன் சேர்த்து மொத்தம் ரூ. 1.18 கோடி கிடைக்கும்.
பிரபல நிதி ஆலோசகரின் எக்ஸ் பதிவு
Expected return:= 15.5% p.a.
Time: 18 yearsSIP = ₹2,000/month
📈 Invested: ₹4.32L
💰 Returns: ₹19.2L
💼 Total: ₹23.5LStart early, stay consistent.#Investing #SIP
₹4,000/month
📈 Invested: ₹8.64L
💰 Returns: ₹38.4L
💼 Total: ₹47L
Power of compounding.…— A K Mandhan (@A_K_Mandhan) June 7, 2025
முக்கிய நன்மைகள்
-
சந்தை வீழ்ச்சியிலும் உங்கள் பணம் முதலீடாகிக் கொண்டே இருப்பதால் அதிக யூனிட்டுகளை வாங்குகிறது. இதனால், சராசரி விலை குறைகிறது.
-
ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் தானாகவே சேமிப்பு பழக்கம் ஏற்படுகிறது.
-
குழந்தையின் கல்வி, ஓய்வு காலம், வீடு வாங்கும் திட்டம் போன்ற நீண்டகால இலக்குகளை எளிதில் அடைய முடியும்.
-
உங்கள் வருமானத்தின் மீதே மீண்டும் வருமானம் கிடைப்பதால், பங்கு மதிப்புகள் மிக வேகமாக வளர்கின்றன.
-
புதிதாக முதலீடு செய்யும் எவருக்கும் பாதுகாப்பான தொடக்கமாகும்.
மார்க்கெட் நிலையை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், தொடங்கும் வயதையும், தொடர்ந்து முதலீடு செய்யும் ஒழுக்கத்தையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். சரியான தொகையை மாதம் தவறாமல் முதலீடு செய்வதன் மூலம் சில வருடங்களில் நமது இலக்கை அடையலாம்.