AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Fixed Deposit : 9.10% வரை FD-க்கு வட்டி வழங்கிய வங்கி.. வட்டியை குறைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.. எந்த வங்கி தெரியுமா?

Fixed Deposit Scheme Interest Rates | நிலையான வைப்பு நிதி திட்டங்களை பொருத்தவரை அதிக வட்டி கொண்ட திட்டங்கள் தான் அதிக லாபத்தை வழங்கும். இந்த நிலையில், ஒரு வங்கி தனது நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டியை குறைத்துள்ளது. முன்னதாக இந்த வங்கி எஃப்டி திட்டத்திற்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கி வந்தது.

Fixed Deposit : 9.10% வரை FD-க்கு வட்டி வழங்கிய வங்கி.. வட்டியை குறைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.. எந்த வங்கி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Jun 2025 12:30 PM IST

சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டுக்காக (Investment) பல வகையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் சிறந்த திட்டமாக கருதப்படுவதுதான் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit). இது சாமானிய மக்களின் முதன்மை திட்டமாக உள்ளது. நிலையான வைப்பு நிதி திட்டம் நிதி பாதுகாப்பை வழங்குவதால் ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். நிலையான வைப்பு நிதி திட்டம் பாதுகாப்பானது மட்டுமன்றி, அதிக லாபமும் தரக்கூடியது. இதன் காரணமாக தான் பெரும்பாலான மக்கள் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அதிக வட்டி கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் நிலையில், இந்த வங்கி தனது நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டியை குறைத்துள்ளது. அது என்ன வங்கி, அதன் தற்போதைய வட்டி நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாதுகாப்பான லாபத்தை வழங்கும் நிலையான வைப்பு நிதி திட்டம்

நிலையான வைப்பு நிதி திட்டம் பல கால அளவீடுகளை கொண்டு இருக்கும். உதாரணமாக 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் என இருக்கும். இதில் ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்து அதில் முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்யும் பட்சத்தில் திட்டத்தின் முடிவில், நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் அதன் வட்டி ஆகியவை சேர்த்து மொத்தமாக பணம் திரும்ப கிடைக்கும். இதில் எதிர்பாராத நஷ்டம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டியை குறைத்த வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை குறைத்தது முதலே பல வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களின் வட்டியை குறைத்து வருகின்றன. அந்த வகையில் சூர்யோதே சிறு நிதி நிறுவன வங்கியும் (Suryoday Small Finance Bank) தனது நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டியை குறைத்துள்ளது. முன்னதாக, 9.10 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது.

சூர்யோதே சிறு நிதி நிறுவன வங்கியின் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் 

இந்த வங்கி மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு தற்போது அதிகபட்சமாக 4.4 சதவீதம் முதல் 8.8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பொது குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 8.4 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூன் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us