Fixed Deposit : வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும்.. அஞ்சலகத்தின் இந்த அசத்தல் திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்!
FD Scheme Offers More than 89,000 interest | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் பல வகையான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தின் வருகிறது. இதேபோல அஞ்சலங்களிலும் நிலையான வைப்பு நிதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு ரூ.89,000 வட்டி வழங்கும் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனிதர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் காரனியாக உள்ளது பொருளாதாரம் (Economy). பொருளாதாரம் இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். எனவே, எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த நிலையில், பொருளாதார முக்கியத்துவத்தை உணர்ந்த பொதுமக்கள் சிலர் சேமிப்பு அல்லது முதலீடு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவ்வாறு முதலீடு செய்யும் பெரும்பாலா மக்களுக்கு முதன்மை தேர்வாக உள்ளது நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit) தான்.
தபால் நிலைய நிலையான வைப்பு நிதி திட்டம்
அஞ்சலகங்கள் மூலம் அரசு பொது மக்களின் நலனுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த பலன்களை பெற முடியும். அதிலும் குறிப்பாக, இந்த திட்டம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் இதில் நிதி இழப்பு அபாயமும் மிக குறைவாக உள்ளது. நிலையான வைப்பு நிதி திட்டத்தைப் பொருத்தவரை, குறிப்பிட்ட தொகையை திட்டத்தின் தொடக்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். பிறகு எத்தனை ஆண்டுகள் அந்த திட்டத்தின் முதலீடு செய்கிறீர்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் மாதம் மாதம் வட்டி வழங்கப்படும்.
ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு ரூ.90,000 வட்டி பெறுவது எப்படி?
அஞ்சலங்களில் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் ஆகிய கால அளவுகளை கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இதில் 5 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுவதால் அதில் முதலீடு செய்யும்போது நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த 5 ஆண்டுகள் திட்டத்தில் நீங்கள் ரூ.2 லட்சம் முதலீடு செய்யு நிலையில், அதற்கு மொத்தமாக திட்டத்தின் முடிவில் ரூ.2,89,989 கிடைக்கும். அதாவது முதலீடு செய்த தொகை ரூ.2 லட்சம் மற்றும் அதற்கான வட்டி ரூ.89,989 ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.2,89,989 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் வட்டியாக மட்டுமே ரூ.89,989 பெற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.