Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

NPS Vatsalya : ரூ.10,000 முதலீட்டுக்கு ரூ.11 கோடி ரிட்டன்.. குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றும் என்பிஎஸ் வாத்சல்யா!

NPS Vatsalya Scheme for Child's Future | பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் எந்த வித நிதி சிக்கல்களையும் எதிர்க்கொள்ள கூடாது என்பதற்காக அவர்கள் சிறியவர்களாக இருக்கும்போதே முதலீடு செய்ய தொடங்கிவிடுகின்றனர். அவ்வாறு தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த திட்டம் தான் என்பிஎஸ் வாத்சல்யா.

NPS Vatsalya : ரூ.10,000 முதலீட்டுக்கு ரூ.11 கோடி ரிட்டன்.. குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றும் என்பிஎஸ் வாத்சல்யா!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Jun 2025 13:28 PM

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நிதியை சேமிக்க விரும்புகின்றனர். ஆனால், சிறிய தொகை மூலம் பெரிய அளவிலான நிதியை சேமிக்க முடியாது என நினைக்கும் சாமானியர்கள் சிலர், எந்த திட்டத்திலும் முதலீடு செய்யாமலே இருக்கின்றனர். இவ்வாறு சேமிப்பு (Saving) அதை முதலீடு (Investment) செய்யாமல் இருப்பது பிற்காலத்தில் குழந்தைகளின் கல்வி, திருமணம் ஆகிய செலவுக்கு நிதி சிக்கல்களை ஏற்படுத்தி விடும். இந்த நிலையில் தான், மாதம் குறைந்த அளவில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை வழங்கக்கூடிய அரசின் திட்டம் பெற்றோருக்கு உகந்ததாக உள்ளது. அதாவது இந்த திட்டத்தில் ஆண்டுக்கு வெறும் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.11  கோடி வரை நிதியை உருவாக்க முடியும். இந்த நிலையில், அது என்ன திட்டம், அதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்படும் NPS வாத்சல்யா திட்டம்

பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்யும் பெற்றோர்களுக்கான சிறந்த திட்டம் தான் இந்த NPS (National Pension Scheme) வாத்சல்யா. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். இந்த NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பொதுமக்களின் பணம், அரசாங்கத்தின் பத்திரங்கள், கடன் நிதிகள் மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகின்றன. இதன் காரணமாக இந்த திட்டம் நீண்ட கால வருமானத்திற்கு சிறந்ததாக உள்ளது. இந்த திட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயர்களில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், குழந்தைகளின் ஓய்வு காலம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

NPS வாத்சல்யா – முதலீடு மற்றும் பலன்கள்

இந்த NPS வாத்சல்யா திட்டத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பெயரில் மாதம் ரூ.834 முதலீடு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், ஆண்டுக்கு ரூ.10,000 முதலீடு செய்வார்கள். இதேபோலவே பிள்ளைகளின் 60 வயது வரை முதலீடு செய்கிறார்கள் என்றால் அதன் கூட்டுத்தொகை ரூ.11 கோடியாக இருக்கும். ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது, இந்த கணக்கீடு விருப்ப திட்டத்தின் கீழ் எதிர்ப்பார்க்கப்படும் வருமானத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. அதன்படி, சராசரி வருமானம் 12.86 சதவீதமாக இருக்கும்போது மட்டுமே ரூ.11 கோடி பெற முடியும். சராசரி வருமானம் 12.86 சதவீததத்திற்கு கீழ் குறைவாக இருந்தால் ரூ.11 கோடிக்கும் குறைவான நிதி மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.