AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FD : தினமும் ரூ.100 முதலீடு செய்தால் போதும்.. ரூ.2 லட்சம் சேமிக்கலாம்.. எப்படி?

Invest 100 Daily to Get 2 Lakhs | நிதி பாதுகாப்பான எதிர்காலத்தை பெற சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆனால், பெரும்பாலான மக்கள் முதலீடு செய்ய பெரிய தொகை தேவைப்படும் என நினைக்கின்றனர். உண்மையில், மிக சிறிய அளவிலான தொகையை கொண்டே சேமிப்பை தொடங்கலாம்.

FD : தினமும் ரூ.100 முதலீடு செய்தால் போதும்.. ரூ.2 லட்சம் சேமிக்கலாம்.. எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Jun 2025 15:03 PM IST

மனிதர்களின் வாழ்க்கை பொருளாதாரத்தை (Economy) சார்ந்ததாக உள்ளது. உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் முதல் அனைத்திற்கும் பொருளாதாரம் மிக முக்கியமாக உள்ளது. எனவே, பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரம் பெற வேண்டும்  என்றால் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்போது சேமிப்பு அல்லது முதலீடு செய்வது எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார தேவைகள் மட்டுமன்றி, நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க உதவும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க அரசும் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தினமும் ரூ.100 முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் வரை சேமிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் அசத்தல் திட்டம்

பொதுமக்களின் நலனுக்காக அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் தொடர் வைப்பு நிதி (RD – Recurring Deposit) திட்டம். இந்த திட்டம் தொடர் வைப்பு நிதி திட்டத்தை போன்ற மற்றொரு திட்டம் ஆகும். அதாவது, நிலையான வைப்பு நிதி திட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு மொத்த தொகையையும் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், தொடர் வைப்பு நிதி திட்டத்தில் அந்த அவசியம் இல்லை. தொடர் வைப்பு நிதி திட்டத்தை பொருத்தவரை தொடர்ந்து முதலீடு செய்துக்கொண்டே போகலாம். அதற்கு ஏற்ப முதலீடு செய்யும் தொகையையும் அதிகரிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

வெறும் ரூ.100 முதலீடு செய்தால் போதும் – ரூ.2 லட்சம் வருமான பெறலாம்

5 ஆண்டுகளுக்கான தொடர் வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.100 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி முதலீடு செய்யும் பட்சத்தில் மாதத்திற்கு ரூ.3,000 முதலீடு செய்திருப்பீர்கள். இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கான தொடர் வைப்பு நிதி திட்டத்தில் தினமும் ரூ.100 முதலீடு செய்தால் மொத்தமாக ரூ.1,18,000 சேமித்திருப்பீர்கள். இந்த திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், இந்த திட்டத்தின் வட்டியாக மட்டுமே ரூ.34,097 கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.1,18,000 மற்றும் அதற்கான வட்டி ரூ.34,097 ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.2,14,097 கிடைக்கும்.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Follow Us