AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Fixed Deposit : ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு வட்டி மட்டுமே ரூ.30,000 தரும் FD திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

Post Office Fixed Deposit Scheme | அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டுமே ரூ.30,000 பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Fixed Deposit : ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு வட்டி மட்டுமே ரூ.30,000 தரும் FD திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Jun 2025 17:23 PM IST

இந்தியாவை பொருத்தவரை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்றால் பெரும்பாலான மக்களின் முதன்மை தேர்வாக இருப்பது நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit) தான். அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் டிடி (TD- Term Deposit) என அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் நிதி பாதுகாப்பை வழங்க கூடிய சிறந்த திட்டமாக உள்ளது. இதில் முதலீடு செய்வதன் மூலம் நிதி இழப்பு ஏற்படாது என்பதால் ஏராளமான மக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், இந்த அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபத்தை பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டம் – வட்டி விகிதங்கள்

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 6.90 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • 2 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • 2 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கான திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

2 ஆண்டுகளுக்கான அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கான திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த 2 ஆண்டுகளுக்கான அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.2 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.2,29,776 கிடைக்கும். அதாவது நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.2 லட்சம் மற்றும் அதற்காக இரண்டு ஆண்டுகளுக்கான வட்டி ரூ.29,776 ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.2,29,776 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Follow Us